பக்கம்:தமிழ் அங்காடி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272  தமிழ் அங்காடி


"செல்லாமை உண்டேல் எனக்கு உரை;
செல்வையேல்
வல்வரவு வாழ்வார்க்கு உரை”

என்னும் குறளின் விளக்கமாகும்.

சினமும் அமைதியும்

திருவள்ளுவர்க்குச் சில நேரத்தில் சினம் வந்து விடும். பாடிக் கறக்க வேண்டிய மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். ஆடிக்கறக்க வேண்டிய மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் அதற்கும் படியாத மாட்டை அடித்துக் கறக்க வேண்டும் என்று உலகியலில் சொல்வதுண்டு. இந்த வகையில் திருவள்ளுவர் சில நேரத்தில் சிலரைச் சாடுவார். சிலவருமாறு:-

"ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"

“புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங் கூறும் ஆக்கம் தரும்”

"ஏவவும் செய்கிலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்”

“சாதலின் இன்னாதது இல்லை இனிததுஉம்
ஈதல் இயையாக் கடை”

“கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்"

"உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்"

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/274&oldid=1204489" இலிருந்து மீள்விக்கப்பட்டது