பக்கம்:தமிழ் அங்காடி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  275



முதலாளி முறை

முதலாளி முறையில் தேவை நோக்கினும் ஆதாய நோக்கே முதலிடம் பெற்றது. எல்லாம் முதலாளிகளின் முழு உடைமையாகும். மூலப் பொருள்களுடன் தொழில் அமைப்பையும் தொழிலாளரின் உழைப்பையும் அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டு தொழில் நடத்துவர். ஊதியம் முழுதும் அவர்கட்கே உரியது. அவர்கள் வைத்ததே விலை; அவர்கள் கொடுத்ததே கூலி. இம்முறையில் முதலாளிகள் கொழுக்கலாயினர்.

பொதுவுடைமை

பொதுவுடைமை என்னும் communism, எல்லாம் சமுதாயத்தின் பொதுஉடைமை என்கிறது. communis என்னும் இலத்தீன் சொல்லுக்கு, பொதுவான-சமூகம் தொடர்பான-என்பது பொருள். கார்ல் மார்க்ஸ் (karl Marx) என்னும் செர்மானியர் வகுத்த இக்கொள்கையை 'லெனின்' பின்பற்றி இரஷ்யாவில் நடைமுறைப்படுத்தினார்.

கலப்புப் பொருளியல்

முதலாளி முறைக் கொள்கையும் பொதுவுடைமைக் கொள்கையும் ஓரளவு இணைந்தது போன்றதான கலப்புப் பொருளியல் என்பதும் உலகில் நடைமுறையில் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தனியார் முயற்சியிலும் தொழில் நடப்பதையும் அரசின் முயற்சியிலும் தொழில் நடப்பதையும் காணலாம். இந்தக் கலப்புப் பொருளியலைத் தான் (Mixed Economics)

‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு’

என்னும் குறள் கோடிட்டுக் காட்டுகிறது.

பொருளியல் கோட்பாட்டில், உண்டாக்கம் (உற்பத்தி Production) முதன்மையானது. மாற்று (Exchange)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/277&oldid=1204493" இலிருந்து மீள்விக்கப்பட்டது