பக்கம்:தமிழ் அங்காடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 தமிழ் அங்காடி


அந்த மரம் எரிந்து சாம்பலாகிறது (அழித்தல்). மரம் சாம்பலாவதுதான் ஒன்று திரிந்து மற்றொன்றாவது.

இதைத்தான், ஐன்ஸ்டீன், 'ஓர் ஆற்றலை ஆக்கவோ அழிக்கவே முடியாது; ஒர் ஆற்றலை வேறு ஆற்றலாக மாற்றலாம்' என்று கூறியிருப்பாரோ - என்னவோ?

ஐன்ஸ்டீனின் ஆய்வு முடிவுகள், பழைய முடிவுகள் சிலவற்றை மறுத்து மாற்றி அறிவியல் அறிஞர்களிடையே ஒரு பெரும் புரட்சியைச் செய்தது.

பெருமைகள்

ஐன்ஸ்டீனின் திறனை மெச்சி உலகெங்கிலுமிருந்து பாராட்டு மடல்கள் வந்து குவிந்தன. பலநாடுகள் அவர் தங்கள் நாட்டிற்கு வந்து போக அழைப்பு விடுத்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பாலஸ்தீனம், சீனா, இந்தியா முதலிய நாடுகளில் தம் மனைவியோடு அவர் சுற்றுப் பயணம் செய்துள்ளார். ஆங்காங்கே அவருக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் வாழ்த்தும் பரிசும் அளவற்றன.

இவரது 'ஒளிமின் விளைவு’ என்னும் ஆய்வுக்காகத்தான் நோபெல் பரிசு கிடைத்தது. இந்த ஆய்வு பேசும் படம் வெற்றியுடன் நடைபெறுவதற்கும் துணை புரிந்தது.

வாழ்க்கை

ஐன்ஸ்டீன் செர்மனியில் பிறந்தார். தந்தையுடன் இத்தாலிக்குக் குடிபெயர்ந்து போனார். பின் சுவிட்சர்லாந்து சென்றார். செர்மன் குடியுரிமையைத் துறந்து சுவிஸ் நாட்டுக் குடியுரிமை பெற்றார். பின் இறுதியாக அமெரிக்காவின் குடியுரிமை பெற்று அமெரிக்காவிலேயே இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/28&oldid=1203096" இலிருந்து மீள்விக்கப்பட்டது