பக்கம்:தமிழ் அங்காடி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  279



ஒவ்வொரு பொருளுக்குப் பெயர் பெற்றதாயிருக்கலாம். இத்தகைய பன்னாட்டுப் பண்டங்களும் புகாரில் ஒருங்கு குவிந்திருப்பதால், பல நாடுகளும் ஓரிடத்தில் - ஒன்று சேர்ந்து காணப்படுவது போன்ற தோற்றம் புகாரில் காணப்பட்டதாம்.

அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை

நால் திசைப் பொருள்கள்

அந்தி மாலையில் நிலா முற்றத்தில் கோவலனும் மாதவியும், மற்ற மக்களும் இன்பப் பொழுது போக்கினர். அதுகாலை, மேற்குத் திசையிலிருந்து வந்த கண்டு சருக்கரையையும் கிழக்குத் திசையிலிருந்து வந்த கரிய அகிலையும் புகைக்காமல், வடதிசையிலிருந்து வந்த வட்டக் கல்லில் தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகளை அரைத்துக் குழம்பாக்கிப் பூசிக்கொண்டனராம்:

"குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கின் காரகில் துறந்து, வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்

தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக...”
(35-38)

என்பது பாடல் பகுதி.

குளிர் காலத்தில் அயிரும் (கண்டு சருக்கரையும்) அகிலும் புகைக்கப்படும். இந்தப் புகை திட்டமான வெப்பத்தோடு மணமும் தரும். வேனில் (வெயில்) காலத்தில் வட்டக் கல்லில் சந்தனம் அரைத்துப் பூசிக்கொள்ளப் பெறும். வீடுகளில் சந்தனக் கட்டையைத் தேய்த்து அரைக்கும் வட்டக் கல் இருக்கும் என்பதை, எங்கள் வீட்டில் உள்ள கல்லைக் கொண்டே யானறிவேன். குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, நடுவில் சந்தனச் சாந்துப் பொட்டு இட்டு, அதன் நடுவில் சிறிய அளவில் குங்குமப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/281&oldid=1204499" இலிருந்து மீள்விக்கப்பட்டது