பக்கம்:தமிழ் அங்காடி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282  தமிழ் அங்காடி


மாவட்டப் பகுதியில் உண்டு. இரு வீட்டாரையும் ‘சம்பந்திகள்’ எனக் கூறுவது உண்டு. சம்பந்திகள்’ என்னும் வடமொழிப் பெயருக்குப் திலாக, மருவினோர் - மருவினவர் என்னும் தமிழ்ச் .சொல்லால் குறிப்பிடுவது சால அழகுடைத்து.

மருவூர்ப்பாக்கத்தில் இருந்தவை

காண்போரைப் போகவிடாமல் தடுக்கும் அழகிய பயன் நிறைந்த யவனர் இருக்கை - பல நாடுகளிலிருந்து கப்பலில் பல்வேறு பண்டங்களை ஏற்றி வந்தவர்கள் தங்கும் இருப்பிடம் - வண்ணக் குழம்பும் சுண்ணமும் சாந்தமும் (சந்தனமும்) பூவும் புகைக்கும் பொருள்களும் நறுமணப் பொருள்களும் ஆகியவற்றைப் பலர் கூவித் திரிந்துவிற்கும் தெருக்கள் - அளவிட முடியாத உடை வகைகள், மணி வகைகள், கூல (தானிய) வகைகள், உண்ணும் பொருள்கள். மீன், இறைச்சி, உப்பு, வெற்றிலை, இன்னும் பல்வேறு பொருள்கள் விற்கப்படும் பகுதிகள், பல்வேறு தொழில் வல்லுநர்கள் இருக்கும் இடங்கள் முதலியன மருவூர்ப் பக்கத்தில் இருந்தன. பாடல்:

‘கயவாய் மருங்கில் காணபோர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும சுண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய கனந்தலை மறுகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/284&oldid=1204505" இலிருந்து மீள்விக்கப்பட்டது