பக்கம்:தமிழ் அங்காடி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  29


தண்ணீர்போல் இவ்வளவு குளிர்ந்த பண்புடைய ஐன்ஸ்டீன், ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் விழுந்த அணுகுண்டுகளால் விளைந்த மிகவும் கொடுமையான கேடுகட்கு முதல் காரணமாயிருந்தார் என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு புதிராகும்.

ஆனால், தமது அணு ஆய்வால் அழிவு உண்டாகும் என அவர் அறிந்து செய்யவில்லை. அணுவால் ஆக்கம் உண்டாக வேண்டும் என்றே தொடங்கினார். அது அவரை அறியாது அழிவுக்குக் கொண்டு போய் விட்டு விட்டது. அதனால்தான் இவர், கட்டுரைத் தலைப்பிலே “நெருப்பை அறியாது மூட்டிய நீர்” என உருவகம் செய்யப் பெற்றுள்ளார். பிற்காலத்தில் அணு ஆக்க வேலைகட்கும் பயன்படுவதை அறிந்த போது ஒரளவு ஆறுதல் அடைந்தார்.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து அறிவியல் ஆராய்ச்சி உலகத்தையே ஆட்டிப் படைத்த மாமேதையான ஐன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் இறுதி மூச்சை உயிர்த்தார்.

6. இராமன் விளைவுகள்

இசைக் குடும்பம்

இராமன் என்றால் இராமாயண இராமன் இல்லை. சர்.சி.வி. இராமன் என்பவர். இவர் திருச்சிக்கு அண்மையில் உள்ள திருவானைக்கா என்னும் ஊரில் 1988 நவம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் சந்திரசேகரர்.

சந்திரசேகரர் இசைத் துறையில் பயிற்சி உடையவர்; வயலின் வாசிப்பதில் வல்லவர். தந்தையைப் போலவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/31&oldid=1203069" இலிருந்து மீள்விக்கப்பட்டது