பக்கம்:தமிழ் அங்காடி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  33


இரண்டாம் உலகப் போருக்குப் பின், திருவாங்கூர்ப் பகுதியில் கிடைக்கக் கூடியவையான தோரியம், யுரேனியம் ஆகியவை பற்றி ஆய்வு நிகழ்த்தும்படி இராமனை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

1948 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற உலக விஞ்ஞானிகள் மாநாட்டிற்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பிப் பாராட்டுப் பெற்றார்.

இவரது ஆராய்ச்சிகளைப் பாராட்டிச் சொற்பொழிவு செய்யுமாறு பல நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தன. அவற்றுள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, சுவீடன், டென்மார்க், நார்வே, பிரான்சு, செர்மனி ஆகியவை குறிப்பிடத் தக்கன. அங்கெல்லாம் இராமன் சென்று சொற்பொழிவாற்றி வந்தார். சொற்பொழிவு என்றால் “கதாகாலட்சேபம்' அன்று - ஆழ்ந்த அறிவியல் ஆய்வு பற்றிய தாகும்.

பெங்களுரில் ஹெபீடல் என்னும் இடத்தில் இவர் பெயரால் அமைக்கப்பட்டுள்ள ‘இராமன் இன்ஸ்டிடியூட்’ என்னும் நிறுவனம் இவர் பெயரைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது.

இந்து மதத்தில் ஐயர் வகுப்பில் தோன்றிய இராமன் மதவேற்றுமை பாராதவர். மாதா கோவிலுக்கும் செல்வார். இந்த மத வேற்றுமை பாராத பண்பு இன்றைய உலகுக்கு மிகவும் இன்றியமையாத தாகும். இராமன் புகழ் நீடு வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/35&oldid=1203059" இலிருந்து மீள்விக்கப்பட்டது