பக்கம்:தமிழ் அங்காடி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காப்பியப் பகுதி

(கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம்)

7. சுவையான ஒரு சொல்வன்மை

சொல்வன்மையைப் பற்றித் திருவள்ளுவர் சில முறைகளைத் தெரிவித்துள்ளார். சில இடங்களில் இருவர் சொல்லாடும்போது அதாவது உரையாடும்போது ஒருவரை ஒருவர் மடக்க மிகவும் திறமையுடன் பேசுவார்கள். கம்ப ராமாயணத்திலே சூர்ப்பணகைப் படலத்தில், இராமனுக்கும் சூர்ப்பணகைக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைக் கம்பர் மிகவும் சுவையாகத் தந்துள்ளார். படித்துச் சுவைத்து மகிழ்வதற்கு உரிய பகுதி இது. இது பற்றி இனிக் காண்போம்.

சூர்ப்பணகையின் வருகை

காட்டில் இராமர், சீதை, இலக்குமணன் ஆகிய மூவரும் தங்கியிருந்த இடத்திற்கு இராவணனின் தங்கையாகிய சூர்ப்பணகை வந்தாள்.

உடன் பிறந்தே கொல்லும்

உயிரோடு உடல் தோன்றும்போதே கூடவே தோன்றும் நோயைப் போன்றவளாகி, உடன் பிறந்த அண்ணன் இராவணன் வேரோடு அழிவதற்குக் காரணமாயிருந்தவளாம் சூர்ப்பணகை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/36&oldid=1203051" இலிருந்து மீள்விக்கப்பட்டது