பக்கம்:தமிழ் அங்காடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36  தமிழ் அங்காடி


உடன் தோன்றிய நோய், சாகடிப்பதற்கு உரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போலும்!

சூர்ப்பணகை இராமனைக் கண்டதும் அவன் அழகில் மயங்குகிறாள். இராமனது பேரழகைச் சூர்ப்பணகை வியந்ததை அறிவிக்கக் கம்பர் பல பாடல்கள் செலவிட்டுள்ளார்.

யாரென வியத்தல்

சூர்ப்பணகை எண்ணுகிறாள்: இவன் யாராக இருக்கலாம்! இவனுக்கு உருவம் இருப்பதால், உருவம் இல்லாத மன்மதன் என்று சொல்ல முடியாது; ஆயிரம் கண்கள் இல்லாமையால் இந்திரனும் அல்லன்; மூன்று கண்கள் இன்மையின் சிவனும் அல்லன்; நான்கு தோள்கள் இன்மையின் திருமாலும் ஆகான்.

“சிங்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்
இந்திரற்கு ஆயிரம் நயனம், ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று, நான்குதோள் உந்தியின் உலகளித்தாற்கு என்று
உன்னுவாள்" (12)

சிந்தையின் உறைபவன் = உருவம் இன்றி உள்ளத்தால் உணரக்கூடிய மன்மதன். உலகு அளித்தான் - காத்தல் கடவுளாகிய திருமால்.

இவ்வாறு எண்ணுவது மேலும் சில இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. முத்தொள்ளாயிரத்தில் பெண் ஒருத்தி சேர மன்னனை நோக்கி இவ்வாறு எண்ணுவதாக ஒரு பாடல் உள்ளது.

இவனுக்கு இரண்டே கண்கள் இருப்பதால் ஆயிரம் கண்களுடைய இந்திரன் அல்லன் இவன் முடியிலே பிறை இன்மையால் சிவனும் அல்லன்; கோழிக் கொடியும் ஆறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/38&oldid=1203045" இலிருந்து மீள்விக்கப்பட்டது