பக்கம்:தமிழ் அங்காடி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  37


முகங்களும் இன்மையால் முருகனும் ஆகான்; எனவே, இவன் அரசாழி உருட்டும் சேரமன்னனே யாவான்.

"இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறுர்ந்த
அந்தரத்தான் என்னின் பிறைஇல்லை - அந்தரத்துக் கோழியான் என்னின் முகன்ஒன்றே கோதையை ஆழியான் என்றுணரற் பாற்று" (130)

ஏறு காளை, அந்தரத்தான் = சிவன். கோதை = சேரன்; ஆழியான் = அரசாழி செலுத்தும் சேரன்.

அழகிய புதிய ஆடவனை நோக்கின் பெண்டிர் சிலர் வியப்படைவதுண்டு என்பதைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியிருப்பதாலும் அறியலாம். திருவாரூர்க் கோயிலில் சுந்தரரைப் பார்த்த பரவை நாச்சியார் பின்வருமாறு எண்ணி வியந்தாராம்.

"முன்னேவந்து எதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்
மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல்
மெய்யருள் பெற்றுடையவனோ
என்னே என்மனம் திரித்த
இவன்யாரோ என நினைந்தார்" (290)

சூர்ப்பனகையும் பரவை நாச்சியாரும் அழகிய புதிய ஆடவனைக் கண்டு வியந்தது பொதுத்தன்மை; ஆனால், இருவர் வியப்பிற்கும் வேறுபாடு உண்டன்றோ?

தவப் பயனோ!

சூர்ப்பனகையின் பெயரால், கம்பர் ; சுவையான கற்பனை நயங்களைக் கொட்டியுள்ளார்.

மன்மதனுக்கு உருவம் இல்லை - இராமனுக்கு உருவம் உண்டு - அதனால் இவன் மன்மதனாய் இருக்க முடியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/39&oldid=1203040" இலிருந்து மீள்விக்கப்பட்டது