பக்கம்:தமிழ் அங்காடி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  39



காவல்துறைக்கும் போர்த்துறைக்கும் ஆள் எடுக்குங்கால், மார்பு இவ்வளவு பரப்பு இருக்க வேண்டும் என ஒரு விதி வைத்துள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது. உயர்ந்த உடல் இலக்கணம் உடைய ஆடவர்க்குச் சிங்கம் போல் பரந்த மார்பும் ஒடுங்கிய வயிறும் இருக்கும். இதற்கு எதிர்மாறாகச் சிலர்க்கு மார்பைவிட வயிறுதான் மிக்க பரப்பளவு-சுற்றளவு உடையதாக உள்ளது. இவர்கள் சாப்பாட்டு ராமன்கள். தயரத ராமனுக்கோ மார்பு மிகவும் பரந்தது.

தவம் செய்த தவம்

இவ்வளவு பேரழகு உடைய இளைய ஆண்மகன் தவக் கோலத்தில் இருப்பது எற்றுக்கோ இவன் தவம் செய்வதற்கு அந்தத் தவம் என்பது எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் - என்கிறாள்:

        "தவம்செயத் தகையஇந் நளின நாட்டத்தான்
        தவம்செயத் தவம் செய்ததவம் என் என்கின்றாள்" (18)

வற்கலையின் நோன்பு

இவனது இடுப்பில் உடுக்கப்பட மரவுரி செய்துள்ள தவத்தைப் பொன்னாடை செய்யவில்லை போலும் என்றாள்.

        "வற்கலை நோற்றன மாசிலா மணிப்
        பொற்கலை நோற்றில போலுமால் என்பாள்” (22)

இங்கே கவுதமப் புத்தரின் வரலாற்றுச் செய்தி ஒன்று நினைவைத் தூண்டுகிறது. புத்தர் தம் மனைவியையும் இராகுலன் என்னும் சிறு குழந்தையையும் விட்டு நீங்கித் துறவு பூண்டார். ஒருநாள், பிம்பிசார மன்னன் வேள்வியில் போட்டு அவித்து உண்பதற்காக ஏராளமான ஆடுகள் ஓட்டிச் செல்லப்பட்டனவாம். ஆட்டு மந்தையின் கடைசியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/41&oldid=1204520" இலிருந்து மீள்விக்கப்பட்டது