பக்கம்:தமிழ் அங்காடி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40  தமிழ் அங்காடி


ஒரு நொண்டிக் குட்டி ஆடு காலை நொண்டி நொண்டி வருந்தியபடியே சென்றதாம். அதன் தாய் ஆடு அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போயிற்றாம்.

ஆடுகள் வேள்வியில் கொல்லப்படக் கொண்டுபோகப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்த புத்தர், அந்த நொண்டிக் குட்டியாட்டை எடுத்துத் தோளில் சுமந்த படி வேள்வியை நிறுத்தும் நோக்குடன் மந்தையின் பின்னே சென்று கொண்டிருந்தாராம்.

இதைக் கண்ட மக்கள், புத்தரின் தோளில் அமர்வதற்கு அவர் பெற்ற குழந்தைச் சிறுவன் பெறாத பேற்றை இந்த நொண்டிக் குட்டியாடு பெற்றுள்ளது என்று வியந்தனராம். கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலில்,

     “சிந்தார்த்தன் பெற்றிட்ட சீரி யோனாம்
          செல்வமகன் இராகுலனைச் சேராப்பேறு
     செத்தாலும் கேள்வியிலாச் சிறிய ஆட்டின்
          செல்வகொண்டிக் குட்டியினைச் சேர்ந்ததம்மா!"
(18:11)

இவ்வாறு, பொன்னாடை பெறாத பேற்றை மரவுரி பெற்று இராமன் இடுப்பை அணி செய்தது.

அணிக்கு அணி

மேலும் சூர்ப்பணகை எண்ணுகிறாள். இந்த அழகனது உடம்பில் சிறந்த அணிகலன்களைப் பூட்டினால், இவனது இயற்கை அழகைக் காட்டிலும் மேலும் அழகு தரா. அந்த அணிகலன்கள் இவனால் அழகு பெறும்.

      "நாறிய நகை அணி நல்ல புல்லினால்
      ஏறிய செவ்வியின் இயற்றுமோ” (24)

இதுபோலவே, சீதைக்கு அணிந்த கலன்களும் அவளது அழகால் அழகு பெற்றனவாம். எத்தனையோ மங்கையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/42&oldid=1204522" இலிருந்து மீள்விக்கப்பட்டது