பக்கம்:தமிழ் அங்காடி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46  தமிழ் அங்காடி


என்று தோழி சுதமதி கூறியதாக மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. ஒர் ஆண் மற்றோர் ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் தீய எண்ணம் இன்றிப் பார்ப்பது போல, ஒர் ஆண் ஒரு பெண்ணைத் தீய எண்ணம் இன்றி ஏறெடுத்துப் பார்க்கலாம் அல்லவா? தீய எண்ணத்துடன் நோக்கலாம் எனச் சுதமதி கூறியதாகக் கொள்ளலாம் எனினும், இங்கே இராமனது பார்வை காமப் பார்வையன்று - வியப்புப் பார்வையாம்.

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கு பற்றி வியப்புத் தோன்றலாம் எனத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார்:

          “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
          மதிமை சாலா மருட்கை நான்கே" (7)

என்பது தொல்காப்பிய நூற்பா. மருட்கை = வியப்பு. ஆக்கம் = ஒன்று மற்றொன்றாய் ஆகுதல். இங்கே, சூர்ப்பனகையின் உருவம் நம்ப முடியாத பேரழகுடன் புதுமையாய் இருந்ததாலும், அரக்க உருமாறி மக்கள் உருவான ஆக்கத்தாலும் இராமனுக்கு வியப்பு தோன்றிற்று. இவளுக்கு ஒப்பானவர் யார் எனச் சீதையை மறந்துவிட்ட நிலையில் இராமன் கூறியுள்ளான். இத்தனைக் கருத்தும், சூர்ப்பணகையின் கோல அழகின் உயரிய எல்லைக் கொடு முடியைப் புனைந்துரைப்ப தாகும்.

சூர்ப்பணகையின் நாடகம்

வந்த சூர்ப்பணகை இராமனது முகம் நல்ல சூழ்நிலையில் இருப்பதை நோக்கி, அவன் அடியைத் தன் கையால் வணங்கி, அவன்மேல் ஒரு வேலை வீசி - வேல் என்றால், கண்ணாகிய - கண் பார்வையாகிய வேலை ஒருமுறை வீசி, பின் பட்டுக்கொள்ளாதவள்போல் வேறு பக்கம் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/48&oldid=1204530" இலிருந்து மீள்விக்கப்பட்டது