பக்கம்:தமிழ் அங்காடி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  55


இராமன்: இவ்வாறு நடக்கப்பெறின், அரக்கர் அருளையும் நின் அழகையும் பெரிய அரசச் செல்வத்தையும் பெற்றவனாவேன். நான் அயோத்தியை விட்டு வந்து காட்டில் பத்து ஆண்டுகள் செய்த தவம் நன்கு பயன்தந்துவிட்டது என்று கூறி, வெளியில் பற்கள் விளங்கும்படி உரக்கச் சிரித்தான்:

             "நிருதர்தம் அருளும் பெற்றேன்
                 கின்னலம் பெற்றேன் நின்னோடு
             ஒருவரும் செல்வத்து யாண்டும்
                 உறையவும் பெற்றேன் ஒன்றோ
             திருநகர் தீர்ந்த பின்னர்ச்
                 செய்தவம் பயந்தது என்னா
             வரிசிலை வடித்த தோளான்
                 வாள்எயிறு இலங்க நக்கான்" (56)

அரக்கியோடு இன்பம் பெற்றதல்லாமல், எல்லா உலக அரசும் கிடைக்கும் என்பதால், ‘யாண்டும் உறையுவும் பெற்றேன்’ என்றான்.

அடே யப்பா! நான் ஒன்று மட்டுமா பெற்றேன்? பல பெற்றேன் என்னும் பொருளில் 'ஒன்றோ' என்றான்.

அயோத்தியை விட்டுக் காட்டுக்கு வந்தது நல்ல தாயிற்று. காட்டுக்கு வந்ததனால்தானே பத்து ஆண்டுகள் தவம் இயற்ற முடிந்தது. அவ்வாறு தவம் இயற்றியதால்தானே நீ சொல்லும் பேறுகளையெல்லாம் பெறமுடிந்தது!

இவ்வாறு இராமன் கூறி மகிழ்ச்சியால் சிரிப்பவன் போல் கடகட என்று உரக்க ஏளனச் சிரிப்பு சிரித்தான். இது எள்ளல், பேதைமை ஆகியவை காரணமாகத் தோன்றிய சிரிப்பாகும். எள்ளல் = அவளை இகழ்தல். பேதைமை அரக்கியின் மடத்தனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/57&oldid=1202372" இலிருந்து மீள்விக்கப்பட்டது