பக்கம்:தமிழ் அங்காடி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56  தமிழ் அங்காடி



சீதையின் வருகை

இராமன் அரக்கியை இகழ்ந்து சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில், சீதை தவக்குடிலை விட்டு வெளியே வந்தாள். அவளைக் கண்டு அவளது அழகில் மயங்கிய அரக்கி பின்வருமாறு எண்ணுகிறாள்.

இவ்வளவு அழகுடையவள் இவன் மனைவியாய் இருக்கமுடியாது. இவ்வளவு அழகினராய் இங்கு வேறு எவரும் இல்லை. தாமரை மலரில் வதியும் திருமகள் தரையில் அடி படிய இப்பெண் உரு எடுத்து வரமாட்டாள். எனவே, இவள் யாரோ எனத் திகைத்தாள்.

             "மருஒன்று கூந்தலாளை வனத்து
                 இவன் கொண்டு வாரான்
             உருஇங்கு இது உடையராக
                 மற்றையோர் யாரும் இல்லை
             அரவிந்த மலருள் நீங்கி
                 அடியிணை படியில் தோயத்
             திருஇங்கு வருவாள் கொல்லோ
                 என்று அகம் திகைத்து கின்றாள்" (59)

கூந்தலாள் = சீதை. இவன் = இராமன். அரவிந்தம் தாமரை. இவள் இராமனின் மனைவி இல்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கற்பித்துள்ளாள் அரக்கி.

ஒன்று மனைவியாயிருப்பின், இவ்வளவு அழகிய இளம் பெண்ணைத் தவசியர் இருக்கும் தவவனத்திற்குள் அழைத்து வரமாட்டான். மற்றொன்று இவ்வளவு அழகுடைய இளம் பெண்கள் இன்னும் இங்கே பலர் இருப்பின், துணையிருக்கிற தென்று இவன் அழைத்து வந்திருக்கலாம் - அப்படி வேறு யாரும் இங்கில்லை.

எனவே, இவள் இவனுடைய மனைவி இல்லை; என்னைப்போல் இடையில் வந்து சேர்ந்து கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/58&oldid=1202375" இலிருந்து மீள்விக்கப்பட்டது