பக்கம்:தமிழ் அங்காடி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  63



நில்லடி இ = இது அளபெடை. இதை நீட்டிப் படிக்க வேண்டும். சீதையைப் பற்றப் போனதால் நில்லடீஇ என்றான். அதற்குள் ஏதாவது நடந்துவிடப் போகிறது என்றெண்ணிக் கடுகினன் - விரைந்து ஓடி வந்தான்.

வில் எடுத்து அம்பு எய்தால் இறந்து விடுவாள் - பெண் அவள் - அதனால், சுற்று வாள் (சுழல் கத்தி) எடுத்தான்.

எரி போன்ற அவள் செம்பட்டைக் கூந்தலை இடக் கையால் முறுக்கிப் பிடித்துக் கொண்டான். இந்த நேரத்தில் அவனைத் தூக்கிக் கொண்டு மேலே எழ முயன்றாள் அரக்கி. அதற்கு இடம் கொடாமல் இலக்குவன் அவளைக் கீழே தள்ளி உதையும் கொடுத்தான்; இனிக் கொடுஞ் செயல்கள் செய்யாதே என அறிவுரை கூறிக் கொண்டே, எளிதில் அவளுடைய முக்கு, காது, முலைக்கண்கள் ஆகியவற்றை அறுத்தான்; பின்னர் ஒரளவு கோபம் தணிந்து கூந்தலையும் விட்டான். -

மூக்கும் காதும் என வாளா கூறி, வெம் முரண் முலை என முலையை மட்டும் அதன் இயல்புற்கு ஏற்ற அடைமொழிகள் தந்துள்ளார். எனவே, முலையைச் செயற்கை முறையில் பெரிதாகக் காட்டக் கூடாது என்பது அறிய வரும்.

மூக்கறுப்பு

பகை உள்ள இடத்தில் முக்குக்கு மிக்க 'மரியாதை’ உண்டு. என்னடா! மூக்கைக் கடித்து விடுவாயா? ஏண்டா! மூக்கை அரிந்து விடுவானா அவன்? டேய்! மூக்கு வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் சாக்கிரதை. வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு போட்டால் சிவப்பாய் இருக்குமல்லவா? அதுபோல் முக்கில் - குத்துகிற குத்தில் சிவந்த குருதி கொட்டுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/65&oldid=1202333" இலிருந்து மீள்விக்கப்பட்டது