பக்கம்:தமிழ் அங்காடி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  65



முலை அறுப்பு

முலை அறுப்பு கிடையாது. ஆனால், இலக்குவன் வன்முறையில் அவளுடைய முலைக்காம்புகளை அறுத்து மானக்கேடு செய்துள்ளான். இது நிகழ்ந்திருக்கக் கூடாது. 'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்னும் மொழிக்கு ஏற்பச் சினம் மிக்கதால் இலக்குவன் இவ்வாறு செய்து விட்டான்.

இதன் பின்பே இலக்குவனுக்குச் சினம் தணிந்ததாம். இதைத்தான் 'போக்கிய சினத்தொடும்' என்று கூறியுள்ளார் கம்பர். திருமுருகாற்றுப்படையில் உள்ள 'கழிந்த உண்டியர்’ என்பதற்கு உண்டி கழிந்தவர் எனப் பொருள் கொள்ளல் போல், இங்கேயும், சினம் போக்கினான், சினத்தை விட்டான் எனக் கொள்ளல் வேண்டும்.

நாள் கொள்ளுதல்

வாளால் கொடிய அரக்கியின் மூக்கையும் முலையையும் அறுத்தது, இராவணனின் தலைகளை அறுக்கப் போவதற்கு நாள் கொண்டது போன்று இருந்ததாம்:

             "கொலை துமித்து உயர் கொடுங்கதிர்
                 வாளின் அக்கொடியாள்
             முலை துமித்து உயர் மூக்கினை
                 நீக்கிய முறைமை
             மலை துமித்தென இராவணன்
                 மணியுடை மகுடத்
             தலை துமித்தற்கு நாட்கொண்டது
                 ஒத்ததோர் தன்மை" (96)

துமித்தல் = அறுத்தல். மலையை வெட்டுவதுபோல் இராவணனின் தலைகளை வெட்டுவதற்கு நாள் கொண்டது போன்றதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/67&oldid=1202337" இலிருந்து மீள்விக்கப்பட்டது