பக்கம்:தமிழ் அங்காடி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  67



இந்த முறையில்,இராவணனின் தலைகளை அறுப்பதற்கு அரக்கியின் உறுப்புகளை அறுத்தது நாள் கொண்டது போன்று இருந்ததாம்.

உறுப்பு அறுபட்ட அரக்கி தன் வேதனையைப் பலவாறு வெளிப்படுத்தி அழுதாள். பின்னர் தன் உறவினர்களை யெல்லாம் விளித்து இங்கிருந்தபடியே முறையிட்டாள். அண்ணன் இராவணனை எண்ணிப் பின்வருமாறு புலம்பினாள்.

புலிக்குட்டி

'புலி புறம் போனாலும் குட்டிக்குக் கேடில்லை' என உலகினர் கூறுவரே.அண்ணாவே! நீ தொலைவில் இருப்பினும் உன் தங்கையாகிய எனக்குக் கேடு வரலாமா? உலகினரின் கூற்று பொய்யோ? மூவர், தேவர், அரக்கர் முதலிய அனைவரினும் வலிமை யுடைவனே! யான் பட்டுள்ள துன்பினைக் காண வரமாட்டாயா?

             "புலிதானே புறத்தாகக் குட்டி கோட்படா தென்ன
             ஒலியாழி உலகுரைக்கும் உரை பொய்யோ ஊழியினும்
             சலியாத மூவர்க்கும் வானவர்க்கும் தானவர்க்கும்
             வலியானே யான்பட்ட வலிகாண வாராயோ" (102)

புலி இரைதேட வெளியே போயிருப்பினும், புலிக் குட்டியை யாரும் அச்சத்தால் ஒன்றும் செய்யார். அதுபோல, இராவணன் எட்டியிருப்பினும் அவன் தங்கையை ஒன்றும் செய்யக்கூடாது என்ற கருத்தில் அரக்கி கூறியுள்ளாள்.

                "குட்டியைத் தின்னலாமோ கோள்புலி புறத்ததாக"
(1134)

என்னும் சீவக சிந்தாமணிப் பகுதியும், கிள்ளி வளவனைக் கோடிர் கிழார் பாடிய

                "புலி புறங்காக்கும் குருளை போல
                மெலிவில் செங்கோல் நீ புறங்காப்ப” (42:10,11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/69&oldid=1202343" இலிருந்து மீள்விக்கப்பட்டது