பக்கம்:தமிழ் அங்காடி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70  தமிழ் அங்காடி


பெண் சங்கு. நாம் பயன்படுத்தும் வெண் சங்கு ஒர் உயிர்ப் பொருளின் தசை நீங்கிய உடலாகும்; சங்கு என்பது ஊர்ந்து செல்லும் ஒருவகை உயிரி.

மாற்றவள் = சககளத்தி. ஒரு பெண்ணுக்கு அவள் கணவனின் மற்றொரு மனைவிக்குச் சக களத்தி என்பது பெயர்; இது வடமொழிச் சொல்லாகும். இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் ஒத்தாள், ஒர்படியாள் என்பன. ஒத்தாள். ஒர்படியாள் என்று உலக வழக்கில் கூறுவது உண்டு. 'சக' என்பது ஒத்த நிலையைக் குறிக்கிறது. ஒர்படி என்றால் ஒத்த நிலை. எனவே ஒத்த நிலையில் உள்ளவள். இவர்கட்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு நிகழ்வது உண்டு; ஆதலால் மாற்றாள் - மாற்றவள் எனப்படுவர். மாற்றாள் என்பதற்கு வேறு உணர்வு உடையவள் எனப் பொருள் கொள்ளாமல், மற்றொருத்தி, அதாவது, ஒருத்திக்கு மாற்றாக பதிலாக உள்ளவள் எனவும் பொருள் கொள்ளலாமே,

ஒத்து - ஒற்றுமையாய் இருக்க வேண்டியவர்கள் ஒருத்தியை ஒருத்தி கொன்று விட முயலும் அளவுக்கு வேறுபடுவதும் உண்டு. உலகியலில் ஒருத்தி உறவு ஒன்றும் இல்லாத மற்றொருத்தியோடு வாதிடும் போது, அடி என் மாமியாரே என்றோ - அடி என் நாத்தனாரே என்றோ என் ஓரகத்தியே என்றோ திட்டுவது இல்லை; மாறாக, 'அடி என் சக்களத்தி' (சககளத்தி) என்று திட்டுவதைக் காணலாம். இதிலிருந்து, சககளத்திப் போராட்டம் எத்த கையது என்பது புரியும். கோசலையின் சககளத்தியாய்க் கைகேயி இருந்து செய்த சூழ்ச்சிதான் தெரியுமே!

இங்கே அரக்கி என்ன சொல்கிறாள். சீதை நடுவில் மாற்றுருவில் வந்த அரக்கியாம்; இராமன் தனக்கு (அரக்கிக்கு) உரியவனாம். எனவே, சீதை அரக்கிக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/72&oldid=1202287" இலிருந்து மீள்விக்கப்பட்டது