பக்கம்:தமிழ் அங்காடி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  71


சககளத்தியாம். அதனால், மாற்றவளைக் கண்டால் மனம் கொதிக்காதா எனக் கேட்கிறாள். எவ்வளவு வியப்பான செய்தி இது!

கணவன் மற்றொருத்தியை விரும்பியதாக நம்பி மனைவி கணவன் மீது ஊடல் கொள்வது மக்கள் இனத்தில் உண்டு. இது அஃறிணை உயிர்களிடத்திலும் இருப்பதாகப் புலவர்கள் புனைந்துரைப்பது ஒரு வகை இலக்கிய மரபு.

இங்கே ஆண்தவளை பெண் சங்கைக் காதலிப்பதாக எண்ணிப் பெண் தவளை ஆணின்மேல் ஊடல் கொள்வதாகச் சொல்லப்பட்டிருப்பது ஒரு வகைச் சுவை.

ஓர் ஆண்கிளி ஒவியத்தில் உள்ள கனியை உண்மையான கனி என்று உண்ணப்போக, அக்கணிஒவியத்தின் பக்கத்தில் ஒரு பெண்கிளி ஒவியம் இருக்க, அதை உண்மையான பெண் கிளி என எண்ணி, அதனை ஆண்கிளி காதலிப்பதாக நம்பிப் பெண்கிளி ஆண்கிளிமேல் ஊடல் கொண்டதாகச் சொல்லப்பட்ட கற்பனையும் உண்டு.

பிரபு லிங்க லீலையில் இத்தகைய சுவை மிக்க கற்பனை ஒன்றைச் சிவப்பிரகாசர் ஒரு பாடலில் செய்து உள்ளார்:

ஒரு களிறு இலைத் தளிர்களை ஒடித்துத் தேனில் தோய்த்துப் பிடியின் வாயில் கொடுத்துக்கொண்டிருந்ததாம். பக்கத்தில் ஒரு பளிங்கு அறை இருந்ததாம். இந்தக் காட்சி அந்தப் பளிங்கில் தெரிந்ததாம். அதைக் கண்ட பெண் யானை (பிடி) தன் கணவனாகிய களிறு வேறு ஒரு பிடிக்கு உணவு ஊட்டுவதாக மாறி எண்ணிக் களிற்றின் மீது ஊடல் கொண்டு கூக்குரல் இட்டதாம்:

             "தளிர்க் குளகினைத்தேன் தோய்த்துத் தனது
                 வாய் கொடுக்கும் செய்கை
             பளிக்கறை அதனுள் கண்டு
                 பரிந்து வேறொன்றினுக்கு இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/73&oldid=1202288" இலிருந்து மீள்விக்கப்பட்டது