பக்கம்:தமிழ் அங்காடி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74  தமிழ் அங்காடி


பின்னர் உதட்டு முத்தம் இன்றியமையாமை பெற்றதால், மூக்கு தேவையற்ற மிகை (Superfluity) என்று சூர்ப்பணகை கூறினர்ள். மற்றும், உதட்டு முத்தம் பரிமாறிக் கொள்வதற்கு முக்கு இடையூறு எனக் கருதப்படுகிறது. இதுதான் அவளது சமாளிப்பு.

முகத்தில் மூக்கு முன்னால் நீட்டிக் கொண்டிருப்பது தேவையற்ற மிகை என்று திறமையாகச் (சாமர்த்தியமாகச்) குர்ப்பணகை சொல்லியிருப்பினும், மூக்கு இவ்வாறு இருப்பதுதான் வசதியானதாகும்.

கண்களும் வாயும் உள்ளடங்கி யுள்ளன. அவற்றை இயற்கையாகத் தாமே மூடிக்கொள்ளும்படிச் செய்ய முடியும். ஆனால், மூக்கு கண்கள்போல் உள்ளடங்கி இருப்பின், மூக்கைப் போதுமான அளவு பாதுகாக்க முடியாது. இயற்கையாகவும் மூடவைக்க முடியாது.

மூச்சை உள்ளே இழுக்கவும் வெளியே விடவும் இப்படியிருப்பதுதான் சதியான அமைப்பாகும். சளி சிந்தவேண்டுமென்றால், இப்போது உள்ள அமைப்புதான் எளிதாக இருக்கும்.

தெனாலி இராமன் ஆயிரம் தலைகளை உடைய காளியைக் கேட்டதாகக் கதை சொல்லுவார்கள். என் ஒரு மூக்கு சளிபிடித்துக் கொண்டாலேயே என்னால் சிந்திமுடியவில்லையே - உனக்கு ஆயிரம் மூக்குகளிலும் சளிபிடித்துக் கொண்டால் நீ எவ்வாறு சமாளிப்பாய்? - என்று கேட்டானாம்.

கண்களை உள்ளடக்கி மூக்கை வெளியே தூக்கி நீட்டச் செய்திருப்பது 'இயற்கையின் தேர்வு’ (Selection of Nature) எனப்படும். யானைக்கு அவ்வளவு நீளத்துதிக்கை அமைந்திருப்பது போன்றதுதான் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/76&oldid=1202302" இலிருந்து மீள்விக்கப்பட்டது