பக்கம்:தமிழ் அங்காடி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 79

8. இராவணன் சூழ்வு

அசைதொழில் அச்சம்

அனுமனால் அழிவுண்ட இலங்கை நகரை மயன் என்னும் தெய்வத் தச்சனைக் கொண்டு இராவணன் புதுப்பிக்கச் செய்தான்; பின்னர், இராமனை வெல்வது எப்படி என்பது குறித்துச் சூழ்வு (மந்திராலோசனை) செய்யலானான்.

இதற்காக, முனிவர், தேவர், ஊழியர்கள் முதலிய பல்வேறு பேர்களையும் அப்புறப்படுத்தினான். வண்டும் காற்றும் கூட சூழ்வு நடைபெறும் இடத்திற்குள் புகாதவாறு காவலர்களை நிறுத்திக் கட்டுப்பாடு செய்தான்.

உலகர் அனைவரும் வரினும் பிசைந்து கொல்லும் காவலர்களைத் திசைதோறும் நிறுத்தியதால், விரைவாகப் பறக்கும் பறவைகளும் விலங்குகளும் பிறவுங்கூட, அங்கேஇங்கே அசையாமல், ஒவியம் போல அமைதியுற் றிருந்தனவாம். பாடல்:

‘திசைதொறும் நிறுவினன் உலகு சேரினும்

பிசை தொழில் மறவரைப் பிறிது என்பேசுவ விசையுறு பறவையும் விலங்கும் வேற்றவும் அசைதொழில் அஞ்சின சித்தி ரத்தினே’ (10) மறவர் = காவலர். வேற்றவும் = பறவை, விலங்கு அல்லாத மற்ற உயிரிகளும். சித்திரம் = ஒவியம். சித்திரத்தின்’ என்பதிலுள்ள ஐந்தாம் வேற்றுமை உருபாகிய ‘இன்’ என்பது இங்கே ஒப்புப் பொருளில் உள்ளது.

துயரப்பட வேண்டிய நேரத்திலும் இராமன் முகம், ஒவியத்திலுள்ள தாமரைபோல் மலர்ச்சியுடன் இருந்ததாக முன்னர்ச் சொல்லப்பட்டுள்ளது. இங்கே, இராவணன்