பக்கம்:தமிழ் அங்காடி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84  தமிழ் அங்காடி


பங்கு பிரித்துக்கொண்டு தீராப் பகைவர்களாயிருப்பர். அண்ணன் வீட்டில் அமர்ந்த காகம் தம்பி வீட்டிற்கு வரக் கூடாது; தம்பி வீட்டில் மொய்த்த ஈ அண்ணன் வீட்டில் மொய்க்கக் கூடாது - அவ்வளவு பகை. இருப்பினும், தெருச் சண்டையில் மாற்றான் ஒருவன் தன் தமையனைத் தாக்குவானே யானால், உடனே தம்பி சென்று தமையனுடன் சேர்ந்துகொண்டு மாற்றானைத் தாக்குவான். சண்டை முடிந்த பிறகாயினும் தமையனும் தம்பியும் ஒன்று சேர்வார்களா? மாட்டார்கள் - அவரவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று விடுவர்.

இவ்வாறாக, தமையன் செயல் பிடிக்காவிடினும் தம்பி கும்பகருணன் விட்டுக் கொடுக்கவில்லை. இது ஒரு விதம் (ஒரு டைப்).

இராமனுக்குப் படை பெருகிப் போருக்கு ஏற்றவாறு ஒழுங்காவதற்கு முன் (தயாராகு முன்), நாம் கடல் கடந்து சென்று அக்கரையை அடைந்து, மாந்தர்களையும் குரங்குகளையும் அற அழித்து விட வேண்டும் என்றான் கும்பகருணன்.

இதைக் கேட்டதும், வேண்டிய ஆயத்தங்களை உடனே செய்து போருக்குப் படைகள் புறப்படுக என்று ஆணையிட்டான இராவணன்.

இந்திர சித்து

அப்போது இராவணனின் மகனாகிய இந்திரசித்து, தந்தையை நோக்கி, நீங்கள் எல்லாம் போர் புரிந்து வென்றி விடுவது! யான் வாளா இருப்பதா? நான் இருக்கும் போது நானல்லவா போரை நடத்திச் செல்ல வேண்டும்? இல்லா விடின் என் மறம் என்னாவது? நான் சென்று வெற்றி பெறேனாயின், நீ என்னைப் பெற்றவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/86&oldid=1202361" இலிருந்து மீள்விக்கப்பட்டது