பக்கம்:தமிழ் அங்காடி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  85


இல்லை - நான் உனக்கு முறையாகப் பிறந்தவனும் இல்லை . என்று சூள் உரைத்தான்!

                "வெற்றி உனது ஆக
                விளையாது ஒழியின் என்னைப்
                பெற்றும் இலை யான் நெறி
                பிறந்தும் இலென் என்றான்” (60)

நெறி என்பது அவனுக்கே பிறந்தவன் என்ற முறையைக் குறிப்பது. உலகியலில் கூட, 'டேய், நீ சரியான தகப்பனுக்குப் பிறந்திருந்தால் இப்படிச் செய்யமாட்டாய்' என்றும், 'டேய், நீ எனக்குத்தான் பிறந்தவன் என்றால் இவ்வாறு செய்து முடிப்பாய்' என்றும் சூளுரைத்துக் கொள்வதை அறியலாம். இதைத்தான், 'யான் நெறி பிறந்தும் இலென்' என்பதை அறிவிக்கிறது.

எயிறு தின்றனன்

இந்திர சித்து பல கூறி இறுதியாக, படையை நடத்திப் போருக்குச் செல்ல விடையளிக்குமாறு தந்தையை வேண்டினான். அப்போது, வீடணன், கடுஞ்சினமுற்றுப் பற்களைக் கடித்து, இதுவரை கூறியோர்க்கெல்லாம் எதிர் மாறாகக் கூறலானான்:

        “என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ
        வன்தொழிலி னாய் எனலும் வாள் எயிறுவாயில்
        தின்றனன் முனிந்து கனி தீவினையை யெல்லாம்
        வென்றவரின் நன்றுணரும் வீடணன் விளம்பும்” (65)

வாள் எயிறு = கூரிய பற்கள். எயிறு வாயில் தின்றனன் என்பதில்லை. பற்களோடு பற்களை 'நறநற’ என்று கடித்தல், பற்களால் நாக்கைக் கடித்தல் ஆகியவை அடங்கும். "இனி ஒரு முறை இவ்வாறு பல்லின் மேலே நாக்கைப் போட்டுப் பேசாதே", "உள்ளேயே மென்று விழுங்குகிறாயே - வாய் திறந்து சொல்லு’ - என்னும் உலக வழக்காறுகள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/87&oldid=1202363" இலிருந்து மீள்விக்கப்பட்டது