பக்கம்:தமிழ் அங்காடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார்

7

பள்ளி’ என்பதாம். உலாவிற்கு ஏற்ற இடம் என்று சிலர் இதற்கு விளக்கம் அளிப்பராம். அரிஸ்ட்டாட்டில் உலவிக் கொண்டே பாடம் நடத்தியதால் இப்பெயர் ஏற்பட்டது என்பராம் வேறு சிலர்.

ஆய்வுகள்

அரிஸ்ட்டாட்டில் உயிரியல் ஆய்வில் மிக்க ஆர்வம் காட்டினும், கணிதம், அறிவியல், வானியல், பொது அறிவு முதலியன பற்றியும் கருத்துகள் தந்துள்ளார். இவர் நானூறு (400) நூல்கட்குமேல் எழுதியுள்ளார் என்பதை அறியும்போது தலை சுற்றுகிறது.

உயிரியலில் தாவரமும் விலங்கியலும் அடங்கும். இத்துறை இவர் போட்ட அடிப்படையின்மேல் இன்று எழுந்து நிற்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் ஆசியாவெங்கும் சுற்றி உயிர் இனங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுவந்து தருவார்களாம். இவரோ கடற்கரையைச் சுற்றிப் பல உயிரினங்கள் பற்றி ஆய்வு செய்வாராம்.

உயிரினங்களை அவற்றின் உடல் அமைப்பிற்கு ஏற்பப் பல குடும்பங்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு குடும்பமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்தத் தொடர்பு ஓர் இயற்கை ஏணியாகும் - என்பது அரிஸ்ட்டாட்டிலின் கொள்கையாகும். இந்தக் கொள்கை, டார்வின் கொள்கையோடு ஒரு சிறிது நெருங்கி வருவதுபோல் தெரிகின்ற தல்லவா?

உயிரினங்களுள் ஒன்று மற்றொன்றைக் கொன்று உயிர் வாழ்கிறது. வலியவை மெலியவற்றைக் கொல்கின்றன. இது குறைபாடு அன்று. அதனதன் உடல் அமைப்புக்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் இப்படித்தான் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/9&oldid=1210589" இலிருந்து மீள்விக்கப்பட்டது