பக்கம்:தமிழ் அங்காடி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92  தமிழ் அங்காடி



வலத்த கால்

இன்னும் கேள்! நமக்குத் தீய நிமித்தங்கள் பல தோன்றியுள்ளன. குதிரையும் யானையும் வலக் காலை முதலில் வைத்து நம் மனைக்குள் புகுகின்றன. இது தீய நிமித்தமாகும்.

                "குலத்தகால் வயநெடுங் குதிரையும்
                அதிர்குரல் குன்றும் இன்றும்
                வலததகால முகதுறத தங்துநம
                மனையிடைப் புகுதும் மன்னோ" (95)

புதுமணப் பெண் மணமகன் வீட்டிற்கு முதல் முதலாகச் செல்லும் போது, தெரு வாயிற்படியில் வலக்காலை முதலில் எடுத்து வைக்க வேண்டும் என்பது ஒரு வகை நம்பிக்கை. அவ்வாறே, மணமகள் வரும்போது, வலக்காலை முதலில் எடுத்து வை என்று பக்கத்தில் உள்ளவர்கள் அறிவுறுத்துவர். இதற்கு எதிர்மாறாக, குதிரையும் யானையும் இடக்காலை முதலில் வைக்க வேண்டுமாம். வலக்காலை முன் வைத்தால் தீமையின் அறிகுறியாம்.

உண்மை வெற்றி

இறுதியாக வீடணன் இராவணனுக்குச் சொல்கிறான்: நம் குலத்தின் புகழும் செல்வமும் நல்லியல்பும் அழிந்து போக, இகழும் தாழ்வும் உண்டாகச் செய்து சுற்றத்தோடு அழிந்து போகச் செய்யாதே. இப்போது உனக்கு வெற்றி என்பது, சீதையை இராமனிடம் விட்டு விடுவதே - என்றான்:

             "இசையும் செல்வமும் உயர்குலத்து
                 இயற்கையும் எஞ்ச
             வசையும் கீழ்மையும் மீக்கொளக்
                 கிளையொடும் மடியாது
             அசைவில் கற்பின் அவ்அணங்கை
                 விட்டருளுதி இதன்மேல்
             விசையம்இல் எனச் சொல்லினன்
                 அறிஞரின் மிக்கான்" (99)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/94&oldid=1202445" இலிருந்து மீள்விக்கப்பட்டது