பக்கம்:தமிழ் அங்காடி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  95



அச்சமோ அன்போ?

வீடணா! எனக்கு விருப்பமில்லாத நன்மைகளை அறிவிப்பதாகக் கூறி, பித்தர்கள் சொல்லக் கூடியவற்றைச் சொல்கிறாய். என்னை அம்மானிடர் வெல்வர் என்றாய். அவர்கள்பால் உனக்கு உள்ள அச்சத்தாலா அல்லது அன்பினாலா இவ்வாறு கூறினை?

           "இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்
           பிச்சர் சொல்லுவ சொல்லினை என்பெரு விறலைக்
           கொச்சை மானிடர் வெல்குவர் என்றனை குறித்தது
           அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா"!
(101)

பிச்சர் = பித்தர் = பைத்தியக்காரர். பிச்சர் என்பது எதுகை நோக்கி வந்த மரூஉ ஆகும்; சிலர் போலி எனலாம். உலகியலில் தமிழில் வைத்தான் என்பதை வச்சான் எனவும், மைத்துனன் என்பதை மச்சுனன் என்றும் தகரத்திற்குப் பதில் சகரத்தைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதுண்டு. மலையாளத்தில் இது பெரு வழக்காகும்: அதாவது மரூஉ என்றோ போலி என்றோ சொல்வதற்கின்றி இது இயற்கையான - சரியான எழுத்து வழக்காகும். எடுத்துக்காட்டு:- அத்தன் = அச்சன்; அடித்து = அடிச்சு; திரித்து = திரிச்சு; சிரித்த = சிரிச்ச - முதலியன.

அச்சமோ அல்லது அன்போ காரணம் என வினவுகிறான் இராவணன். இவை இரண்டும் காரணம் இல்லை, அறநெறியே காரணமாகும். தம்பியை ‘ஐயா’ என விளித்தது கிண்டலான இகழ்ச்சிக் குறிப்பாகும்.

வாலியின் வெற்றி

வீடணா! நான் குரங்கினமான வாலியிடம் தோற்றுப் போனதாகக் கூறினாய். வாலியை எதிர்ப்பவரின் பாதி ஆற்றல் வாலியிடம் போய்விடும் எனச் சிவன் வாலிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/97&oldid=1203461" இலிருந்து மீள்விக்கப்பட்டது