பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

 இந்நாட்டில் வழங்கிய பாஷை தமிழே என்பதற்கு அந்நாட்டில் தற்காலம் கிடைக்கும் சாசனங்களும் கல்வெட்டுகளுமே போதுமான சாட்சியாம். கி. பி. எட்டாம் நூற்றண்டிலும் மலையாள தேசத்தில் கிடைக்கும் சாசனங்களும் கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன ; ஆகவே அக்காலத்தில்கூட அவ்விடங்களிலெல்லாம் சுத்த தமிழே பேசப்பட்டது என்பது திண்ணம்.


சரித்திர ஆராய்ச்சியினால் பாண்டிய அரசர்கள் கி. மு. 26 ஆண்டிலும், 20ஆம் ஆண்டிலும், தென் இந்தியாவிலிருந்து ஐரோப்பா கண்டத்திலுள்ள ரோம நகரத்தில் ஆண்ட அகஸ்டஸ் சிசர் (augustus caesar) என்பவருக்கு ராயபாரிகளை அனுப்பியதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அன்றியும் மஹாவம்சோ என்று சொல்லப்பட்ட சிங்கள தீபத்துச் சரித்திரத்தில் கி. மு. 205ஆம் ஆண்டில் ஏலேலன் என்னும் சோழ அரசன், அத்தீபத்தின்மீது படையெடுத்து வந்து, அதன் அரசனைவென்று அனுராதபுரம் எனும் பழைய பட்டணத்தில் அரசாண்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த அனுராதபுரத்தில் ஏலேல சிங்கனைப் புதைத்த இடம் இப்பொழுதும் பார்க்கலாம். வட இந்தியாவில் கி. மு. 773 முதல் கி. மு. 232 வரையில் அரசாண்ட அசோக மஹாராஜாவின் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டியர்களுடைய தேசங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் எகிப்து தேசத்தில் ஆண்ட “ சாலமோன்' என்னும் அரசன் காலத்தில் தென் இந்தியாவிலிருந்து தோகை' (மயில்) அவர்கள் கப்பலின்மூலமாக, வர்த்தகங்களால் மற்ற சரக்குகளுடன் கொண்டு போகப்பட்டதென்று கூறப் பட்டிருக்கிறது. சாலமோன் அரசன் அரசாண்ட காலம் சுமார் கி. மு. 1000 ஆம்; ஆகவே இன்றைக்கு 3000 வருடங்களுக்கு முன்பாம். எழுத்து மூலமாக தாம் கண்டறிந்தவற்றுள் மிகவும் புராதனமான தோகை எனும் இத் தமிழ்மொழிக்கு தமிழர்கள் அனைவரும் நமது பாஷையின் தொன்மையை ஐயந்திரிபற விளக்கு வதற்காக நன்றி பாராட்டவேண்டும்.


இனி நமது தேசத்தில் புராதனமான சமஸ்கிருத புஸ்தகங்களில், தமிழ் பழமையான பாஷை என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கின்றனவா என்று பார்ப்போம். ' உதயணன் காதை ' என் பது ஒரு பழையநூல். இதன் மூலநூல் பிரஹத் கதா சமஸ்கிருத சொல், உதயணன் காதையில், உதயணன் ராஜதானியாகிய ராஜ