பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

 கிரஹம் "தமிழ்ச் சேரி” எனும் ஓர் இடம் இருந்ததாகக் கூறப்பட் டிருக்கிறது. "தலைப்பெரும் சேனைத் தமிழ்ச் சேரியும் ” என்பதைக் காண்க. இந்த ராஜக்கிரகமானது உதயணன் ஆண்ட தேசத்திற்கு கி. மு. 700ஆம் ஆண்டில் தலைநகராயிருந்தது. பாகவத புராணம் எனும் சம்ஸ்கிருத நூலில் சத்யவாகன் எனும் அரசன் திராவிடர்களுடைய அரசன் என்று கூறப்பட்டிருக்கிறது. புராதன இதிகாசமாகிய சம்ஸ்கிருத மஹாபாரதத்தில் சேர, சோழ, பாண்டியதேசங்களைப் பற்றி கூறியிருக்கிறது. பாரதத்தில் அர்ச்சுனன் திக்விஜயம் செய்த காலத்தில் பாண்டிய அரசியாகிய சித்ராங்கதையை மணந்ததாகச் சொல்லி யிருக்கிறது. அன்றியும் அத்தேசத்தின் பிரதான பட்டணம் மணலூர் என்று குறிப்பிட்டிருக்கிறது. மணல்+ஊர்=மணலுராம் மணல் என்பதும் ஊர் என்பதும் சுத்த தமிழ் மொழிகளாம். ஆகவே மஹாபாரத யுத்த காலத்தில் தென் இந்தியாவில் தமிழ் பாஷையானது பரவியிருந்ததென்பதற்கு இது ஒரு முக்கிய ஆதாரமாம் . எனவே தோகை என்பதைப்போல் மணலூர்’ எனும் பதமும் தமிழ் அபி மானிகளுக்கு கடுபெரும் ஊன்றுகோலாம். மஹாபாரத யுத்தமானது சுமார் கி. மு. 1500 வருடத்தில் நடந்ததாக எண்ணப்படுகிறது. தமிழ்ச் சங்க நூல்களில் ஊதியஞ் சேரல்' எனும் சேர அரசன் பாண்டவர்களுடைய சைனியத்திற்கு உணவிட்டதாகக் கூறப்பட்டிருப்பதை இங்கு நாம் கவனிக்கவேண்டும். ஆகவே இன்றைக்கு 3500 வருடங்களுக்குமுன்பே தமிழ் பாஷை வழக்கத்திலிருந்ததாகவும் நிரூபித்தபடியாகும். மஹாபாரதத்திலும் புராதன சமஸ்கிருத கிரந்த மாகிய வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் 10ஆவது சர்க்கத்தில் திராவிடம் எனும் தேசம் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் கிஷ்கிந்தா காண்டத்தில் 41வது சர்க்கத்தில் தெற்கே சோழ பண்டிய, கேரள தேசங்களிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாண்டியர்களுடைய பழைய ராஜதானியாகிய கவாடபுரமும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருதுங்கால் சர்ஜான் மார்ஷல் என்பவர் இன்றைக்கு 5000 வருடங்களுக்குமுன் திராவிடர்கள் எனும் ஜாதியார் சிறந்த நாகரீகத்துடன் வாழ்ந்தவர் என்று கூறியது மிகையன்று என்று நாம் கூறலாம். அத்திராவிடர்களுடைய பாஷை தமிழ் பாஷையென்பது இனி நாம் கூறாமலே விளக்கமாம்.


தமிழ் பாஷையானது மிகவும் புராதனமான பாஷைகளில் ஒன்று என்பதற்கு, மேற்கூறிய ஆதாரங்களன்றி, இவ்விஷயங்களில் நிஷ்பட்ச