பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13செந்தமிழ்-கொழுந் தமிழ்

மேற்சொன்னபடி, ஆதிகாலத்திலேயே தமிழ் மொழியானது மாறு தலையடையத் தொடங்கிற்று என்பதற்கு பூர்வத்திய தமிழ் செந்தமிழ் நாடு, கொழுந் தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டதே அத்தாட்சியாம். செந்தமிழ் நாடு என்பதற்கு, சுத்தமான கலப்படமில்லாத தமிழ் மொழிகள் பேசப்பட்ட தேசம் என்று பொருளாம்; கொழுந் தமிழ் நாடு என்பதற்கு தமிழ் மொழிகள் கொஞ்சம் மாறுபாடு உடையன வாய்ப் பேசப்படும் நாடு என்று பொருள் கொள்ளலாம். முற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் எல்லை "வைகையாற்றின் வடக்கு, மருதையாற் நின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு" என்று கூறப்பட்டிருக்கிறது. கொடுந் தமிழ் நாடென முற்காலத்தில் கூறப்பட்டவை:-தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேணாடு பூழி, பன்ஷி, அருவா, அருவாவதலை, கீதம், மலாரு, புனநாடு, எனப் பன்னிரண்டாம். அன்றியும் சிலர் செந்தமிழ் நாடென்பது பாண்டி நாடென்றும், மற்றும் சிலர். சோழ நாடென்றும் கூறியுள்ளார். அவர்கள் அவ்வாறு கூறியதற்கு தத்தம் நாட்டின் மீது அவர்களுக்கிருந்த அபிமானம் தான் காரணம் என்று ஊகிக்கலாம் மொத்தத்தில் ஆராயுமிடத்து செந்தமிழ் என்பது கற்றவர்களால் வழங்கப்பட்ட சுத்த தமிழ் என்றும், கொழுந்தமிழ் என்பது மற்றோரால் வழங்கப்பட்ட சிதைந்த தமிழ் என்றும் எண்ணலாம்.

முத்தமிழ்

பூர்வ காலத்தில் தமிழானது, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் மொழிகளையும், இயற்றமிழ்மொழி, இசைத் தமிழ்மொழி, நாடகத் தமிழ் மொழி, என மூன்று வகையாகக் கருதலாம்.

(1) இயற்றமிழ்மொழி என்பது சாதாரணமாக நாம் செய்யுட்களிலும் வசன நடையிலும் உபயோகிக்கும் சொற்களாம்; அவை களுக்கு உதாரணங்கள் கொடுப்பது மிகையாம்.

(2) இசைத் தமிழ்மொழிகள் தமிழர்களுடைய சங்கீதத்தைச் சார்ந்த மொழிகளாம், இதற்கு உதாரணமாக குறிஞ்சி, தக்கை, கொல்லி, கெளவாணம், முதலிய பண்களின் பெயர்களையும், குரல், துத்தம், கைக்கிளை. உழை முதலிய ஸ்வரங்களின் பெயர்களையும்,