பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

 பிறகு இங்கு பயிர் செய்யப்பட்டது. அன்னாசி என்கிறபதம் போர்த்து கேயர் பாஷையிலுள்ள அனனாஸ் ' என்கிறமொழியிலிருந்து நாம் எடுத்துக்கொண்டோம். இப்பழத்தைத் தரும் செடியானது முதல்முதல் தென் அமெரிக்காவில் உற்பத்தியானதாம். அங்கு பிரெஜீலியர் பாஷை யில் " நாகாஸ் ' என்று பெயருடையதாம். சர்க்கரை என்பது வெளி நாட்டிலிருந்து வந்ததென எண்ணப்படுகிறது. சீனி சர்க்கரை சீன தேசத்திலிருந்து வந்ததாம். பழைய தமிழ்ப் பெயர் வெல்லம் என்பதாம். பரங்கிச் சக்கை என்பது வெளி நாட்டு வஸ்துவென்று பெயரைக்கொண்டே சொல்லிவிடலாம். இவ்வாறு அநேக பதங்களை எடுத்துக்கொண்டு அவைகளின் பூர்வோத்தரத்தை விசாரித்தல் நமக்கு இன்பத்தையும் அறிவையும் புகட்டும் என்பதற்குச் சந்தேகமில்லை. மிளகாய் என்கிற பதத்தை ஆராய்வோம். இப்பதத்தை படித்துப் பார்ப்போமாயின் மிளகு+காய்=மிளகாய் என்பதாம். மிளகு என்பது இடுகுறிப் பெயராம். மிளகானது சாதாரணமாக மலையாள நாட்டில் உற்பத்தியாகும் வஸ்துவாம். அதற்கும் மிளகாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இதற்கு பதில் என்னயெனின். மிளகாய் தமிழ்நாட்டில் பூர்வத்தில் உண்டானதல்ல; வேறு தேசங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பொருள்; மிளகைப்போல் அதுவும் மிகுந்த காரமுள்ள வஸ்துவாயிருந்தமையால், அதற்கு மிளகாய் என்று காரணப் பெயர் உண்டாயிற்று. இதற்குத் தெலுங்கிலும் மிரியலுகாய் ' என்றி பெயர் இருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு ஆங் கிலத்தில் சில்லி (Chilli) என்று பெயர். அப்பெயரை ஆராயுமிடத்து தென் அமெரிக்காவில் சில்லி (Chilli) என்கிற தேசத்தில இது ஆதி யில் உண்டாகி, பிறகு ஐரோப்பா கண்டத்திற்கு கொண்டுபோகப் பட்டு, இது ஆங்கிலத்தில் சில்லி என்கிற பெயர் கொடுக்கப் பட்டதை நாம் அறிகிறோம். அன்றியும் பூர்வ காலத்தில் கப்பல்கள் மூலமாக மலையாள தேசத்திற்கு மிளகாய்கள் முதன் முதல் கொண்டு வரப்பட்டனவென்பதற்கு, அத்தாட்சியாக மலையாள தேசத்தில் இதற்கு கப்பல் மிளகு ' என்கிற காரணப் பெயர் வந்தது கவனிக் கத்தக்கது. " முட்டைகோஸ் ' என்கிற பதத்தை எடுத்துக்கொள்வோம். இதற்குப் பொருள் உருண்டையாயிருக்கப்பட்ட கோஸ் " என்றாகும். கோஸ் என்கிற பதம் தமிழ் பதமன்று. அதனாலேயே இப் பதார்த்தம் வேறு தேசத்திலிருந்து இங்குகொண்டு வரப்பட்டதென்று நாம் ஊகிக்கலாம் இது ஐரோப்பா கண்டத்தில் சாதாரணமாக வளரும்