பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

 பொருளாம் ; இது வளருவதற்கு குளிர்ச்சியான பூமிவேண்டும். " கோஸ்பூ ” என்று வழங்கப்படுகிற பதார்த்த முமப்படியே. பெங்களூர் அவரைக்காய் என்பது ஆங்கிலத்தில் பிரஞ்சு பீன்ஸ் (French Beans) என்று பெயருடையது, அது பிரான்சு தேச மூலமாக நமது நாட்டிற்கு வந்தது; அவரை வர்க்கத்தை ஒத்திருப்பதால் அதற்கு அவரையென்றும், பெங்களூரில் முதன் முதல் பயிரிடப்பட்டபடியால் பெங்களூர் அவரைக்காய் என்றும் பெயர் வந்திருக்க வேண்டும். இங்ஙனமே பெங்களூர் கத்தரிக்காய் என்று ஒரு பதார்த்தம் சென்னையில் விற்கப்படுகிறது. தற்காலம் இதற்கும் நமது நாட்டுக் கத்திரிக் காய்க்கும் சம்பந்தமில்லை. ஆயினும் வெளி உருவத்தில் கத்திரிக்காயை கொஞ்சம் நிகர்த்திருப்பதால் இதற்கு பெங்களூர் கத்தரிக்காய் என்று பெயர் உண்டாயிற்று. இதே பதார்த்தத்திற்கு பெங்களூரில் சீமை கத்திரிக்காய் என்று பெயர் ? இதனால் இப்பதார்த்தம் சீமையிலிருந்து பெங்களூர் மூலமாக இங்கு வந்து சேர்ந்ததென ஊகிக்கலாம். உருளைக் கிழங்கு எனும் பதத்தை எடுத்துக்கொள்வோம் உருளை+கிழங்கு=உருளைக் கிழங்காம்; உருளையாயிருக்கிற கிழங்கு என்று பொருள்படும்; ஆகவே இது காரணப் பெயராகும். இது காரணப் பெயராயிருப்பதானால் வெளி ஊரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஒரு வாறு நிர்ணயிக்கக்கூடும்; வாஸ்தவமும் அப்படித்தான். ஐர்லாண்டு (Ireland) முதலிய மேனாட்டு தேசங்களில் முதன் முதல் உற்பத்தி யாக்கப்பட்டு, ஐரோப்பியர் மூலமாக நமது நாட்டிற்கு வந்த பதார்த்த மாகுமிது. வெளி தேசங்களிலிருந்துவரும் பதார்த்தங்களுக்கெல்லாம், சீமை என்கிற மொழியைச் சேர்த்து பெயரிட்டிருப்பதைக் கவனிக்கவும், உதாரணமாக சீமை அவரை, சீமை தக்காளி முதலியவற்றைக் காண்க:

திராட்சை என்பது "திராக்ஷா" எனும் வடமொழியாம். பதத்தை நோக்குமிடத்தே அது சுத்த தமிழ்மொழியல்லவென்று தெரிகிறது. இத்திராட்சையானது வட இந்தியாவிலிருந்து தென்னாட்டிற்கு வந்த தென்பதை நாம் அறிகிறோம். மதுரை முதலிய இடங்களில் இதற்குக் கொடி முந்திரி என்கிற பெயர் வழங்குகிறது; கொடிகளில் உண்டாகும் முந்திரி எனும் காரணப் பெயராம். தீராட்சி என்பது தீவு திராட்சை என்பதின் சிதைவாம். இப்பதத்தை நோக்குமிடத்து இது தீபங்களிலிருந்து நமது நாட்டிற்கு பூர்வம் கொண்டுவரப்பட்டதென விளங்கும். மொலாம் பழம் என்பது ஆங்கில மெலன் (Melon) என்