பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

 (2) இரண்டாவது ஒரு பாஷையில் புதிய பதங்கள் புகுவதற்குக் காரணம் அந்நியர்கள் அந்நாட்டில் வந்து குடியேறுவதாம் என்று கூறினோம். இம்மார்க்கத்தினால்தான் தமிழ்ப் பாஷையில் ஆயிரக் கணக்கான சம்ஸ்கிருத மொழிகள் வந்து புகுந்தன வென்பதற்கு சந்தேகமில்லை. தற்காலம் வழங்கும் தமிழில் அநேக ஆயிரம் சம்ஸ்கிருத பதங்கள் உபயோகிக்கப்படுகிறபடியால் சில சம்ஸ்கிருத அபிமானிகள் சம்ஸ்கிருத பாஷையிலிருந்தே தமிழ் உற்பத்தியாயது என்று கூற இடங்கொடுத்தது.

சம்ஸ்கிருத பாஷையை தாய் பாஷையாக உடைய ஆரியர்கள் தமிழ் நாட்டில் குடியேறப் புகுந்தது இன்றைக்கு சுமார் 3000 வருடங்களுக்கு முன்பிருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்களால் ஒரு வாறு கணிக்கப்பட்டிருக்கிறது. பிரன்பானர்ஜி (Biren Bonnerjea) என்னும் சாஸ்திரஞர் ஆரியர்கள் திராவிடர்களிடம் அணுகிய காலத்தில் ஆரியர்களைவிட திராவிடர்கள் அதிக நாகரீகமுடையவர்களாயிருந்தனர் என்று கூறியிருக்கிறர். இச்சந்தர்ப்பத்தில் பூர்வீக தமிழர்களுடைய நாகரீகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த காலஞ்சென்ற கனகசுந்தரம் பிள்ளை அவர்கள் பூர்வீகத் தமிழர்கள், சங்கீதம், இலக்கணம், வான சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியன ஆசியர்கள் இங்கு வரு முன்னரே அறிந்திருந்தனரென்றும், அவைகளில், அவர்கள் உபயோகித்த மொழிகள் கேவலம் தமிழ் மொழிகளாம் என்றும் கூறியிருக்கின்றனர். இவ்விஷயத்தில் மிகுந்த ஆராய்ச்சி செய்த கால்ட் வெல் துரையவர்களும் ஏறக்குறைய இதே அபிப்பிராயப்பட்டிருக்கின்றனர். மேலும் பூர்வீக நாகரீக சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய ஆர்க்கியாலஜி (Archaeology) என்னும் சாஸ்திர நிபுணர்கள் தற்காலம் மொஹன்ஜதரோ ஹாரப்பா முதலிய இடங்களில் திராவிடர்கள் கி. மு. 3000 வருடங்களுக்கு முன்னமே வீடுகள் முதலியன கட்டக், கூடிய நாகரீகத்தையடைந்திருந்தனர் என்று நிரூபித்திருக்கிரார்கள்.

இனி வடமொழி யெனப்பட்ட சமஸ்கிருதத்திலிருந்து தென்மொழி யெனப்பட்ட தமிழில் சமஸ்கிருத பதங்கள் எவ்வாறு கலந்தனவென்று ஆராய்வோம். எல்லா சரித்திரக்காரர்களும், ஆரியர்கள் தென் இந்தியா வில் குடியேறியது; இந்நாட்டை வெற்றி பெறவேண்டும் என்று அல்ல, சாந்தமான மார்க்கங்களினால்தான், இங்கு புகுந்தனர் என்று ஒப்புக் கொள்ளுகின்றனர். யுத்தம் செய்து வெற்றியினாற் புகாது சாந்தமான