பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழ் அன்னை
பிறந்து வளர்ந்த கதை

தமிழ் மொழிகளைப்பற்றி ஆராய்ச்சிசெய்ய ஆரம்பிக்கும்போது, தமிழ்மொழி முதன்முதல் எங்கு உண்டானது. எப்படி உண்டானது என்று அறிவது அவசியமாகும்.

கடவுள் இப் பூமண்டலத்தையும் அதனுள் மனித வர்க்கத்தையும் சிருஷ்டித்து, மனிதர்களுக்குப் பேசும் திறமையைக் கொடுத்தார் என்பது மதங்களின் அபிப்பிராயம், இது ஒருபுறம் நிற்க.

பாஷை அல்லது மொழி என்பது மனிதவர்க்கம், வாயினால் ஒலிக்கும் அர்த்தமுடைய சப்தங்களைக் குறிப்பதாம். இப்பூமண்டலத்தில் மனிதர்கள் உற்பத்தியாகி விர்த்தியடைந்த விஷயத்தைப்பற்றி கூறும் சாஸ்திரத்திற்கு ஆந்திரோபாலஜி (anthropology) என்றுபெயர். இதற்கு தமிழில் " மனிதர்களுடைய பூர்வீக நாகரீக சாஸ்திரம் என்று கூறலாம். இந்த சாஸ்திர ஆராய்ச்சி செய்தவர்களுள் சிலர் மனிதன் பூமியில் அநேக ஆயிரம் வருடங்களுக்குமுன் ஓர் இடத்தில் தோன்றி, பிறகு எங்கும் பரவினன், என்று எண்ணுகின்றனர்; இங்னமாயின், பல பாஷைகளும் ஒரே ஆதி பாஷையிலிருந்து உற்பத்தியாயிருக்க வேண்டும். ஆயினும் அந்த சாஸ்திரம் கற்றுணர்ந்தவர்கள் பலர். மனித வர்க்கமானது இப்புவியில் பல இடங்களில் தோன்ற ஆரம்பித்ததென்று அபிப்பிராயப்படுகின்றனர். இவ்வபிப்பிராயப்படி, சில பாஷைகள் இவ்வுலகில் ஆதியில் உண்டாயிருக்க வேண்டும். பிறகு அவைகளிலிருந்து தற்காலத்திய பல பாஷைகள் பிரிந்திருக்கவேண்டும். அன்றியும் இவ்வுலகில், மனிதர்கள் உற்பத்தியானபிறகு, ஆதியில் நாகரீகமில்லாத காட்டு மனிதர்களாய் குகைகளில் மிருகங்களைப் போல வசித்து, காடுகளில் மற்றப் பிராணிகளை வேட்டையாடி ஜீவித்து வந்தனர் என்றும், பிறகு ஆடு மாடுகளைப் பழக்கி, அவற்றின் பால், மாமிசம் முதலியவற்றை உண்டுவந்தனர் என்றும், அவைகளை மேய்ப்பதற்காக பசும்புல்லுள்ள பல இடங்களில் சஞ்சரிக்கத் தலைப் பட்டனரென்றும், அப்படிச் சஞ்சரிக்கப் புகுந்தவர்கள், சமுத்திரக் கரையிலுள்ள பிரதேசங்களுக்கும் போனவர்கள் மீன் பிடிக்கக் கற்று