பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 களின் பெயர்களும் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தன. சிங்கம் என்பது சிம்ஹம் என்கிற வடமொழிச் சொல்லாம் ; ஒட்டகம் என்பது உஷ்ட்ரம் ' என்னும் சம்ஸ்கிருத மொழியாம். இவ்வாறு ஆயிரக்கணக்கான வடமொழிகள் தமிழ் பாஷையில் கலந்ததினுல், தமிழானது சிறந்த வளப்பமுடையதாய தென்றே சொல்ல வேண்டும். பல பொருள்களுக்கு தமிழ் மொழியும், சம்ஸ் கிருத மொழியும் இரண்டும் வழங்கலாயின. இதற்கு உதாரணமாக சிலவற்றைக் கூறுவோம்: சுத்தத் தமிழ் மொழி சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த மொழி விளக்கு தீபம் ឃ្លាធំ புஷ்பம் கெவி குகை தயிர் ததி முகில் மேகம் உயிர் பிராணன் சில பாஷா தத்வ அறிஞர், தமிழ் பதங்களும் சம்ஸ்கிருத பதங் களும் ஒன்றினின்றும் மற்ருென்றிற்கு வராது, இவற்றிற்குமுன் இருந்த ஏதோ ஒரு பாஷையினின்றும் பிரிந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதற்கு உதாரணமாக, மொக்கு என்னும் தமிழ் பதமும் முகுளம் என் கிற சம்ஸ்கிருத பதமும், வேருெரு ஆதி பாஷையிலிருந்தும் பிறந்திருக் கலாம் என்று டாக்டர் குண்டர்ட் (Gundert) என்பவர் எண்ணுகிருர். அடி, உடை அடை முதலிய பதங்கள் சம்ஸ்கிரதத்திற்கும் தமிழுக் கும் பொதுவான பதங்கள் என்று டாக்டர் கார்ல்ட்வெல் துரை அபிப் ராயப்படுகிருர், சாதாரணமாக ஒரு பதம், சுத்த தமிழ் மொழியா, அல்லது சம்ஸ் கிருதத்திலிருந்து வந்ததா என்று அறிவதற்கு, அப்பதம் எந்த தாது (Root) விலிருந்து வந்ததென்று ஆராய்வோமாயின் சுலபமாய் அறிய லாம். பட்சி என்பது பட்சம் எனும் சம்ஸ்கிரதத்திலிருந்து வந்தது பட்சம் இஃது, பட்சி இரகையுடையது. ஆகவே இது சம்ஸ்கிருத பத மாம், சூழ்ச்சி என்பது சூழ் எனும் தாதுவிலிருந்து வந்தது. ஆகவே இது சுத்த தமிழ் மொழியாம். (இதை சுட்சி என்று எழுதுவது தவருகும்) அங்ஙனமே ழ என்கிற எழுத்தும், வல்லின றகரமும்,