பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


岔领 ஆயுத எழுத்தும் அடங்கிய பதங்கள் சாதாரணமாகத் தமிழ் பதங் களாயிருக்கும். இம்மூன்று எழுத்துகளும் சம்ஸ்கிரதத்திலில்லை; ழ ே என்கிற எழுத்து இவ்வுலகில் இந்த இரண்டு எழுத்துக்களும் வேறெந்த பாஷையிலுமேயில்லை யெனலாம்; ஃ என்னும் ஆயுத எழுத்தும் தமிழ் பாஷைக்கே உரியதாம். உதாரணங்கள் 尊 * கூழ் வாழை அஃது கழல் அஃகம் வழக்கு அஃகல் நிழல் இது பாழ் 邸、母。 சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் உபயோகிக்கப்பட்டு வரும் சில பதங்களின் பூர்வ அர்த்தம் அறியாது தவருக வேறு அர்த்தத்துடன், சில மொழிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு சில உதாரணங்களை கவனிப்போம். அதிர்ஷ்டம் என்னும் பதத்திற்கு சம்ஸ்கிருதத்தில் கண்ணுக்குப் புலப்படாதது என்று பொருளாம்; ஒருவனுக்கு ஒரு பொன் அதிர்ஷ்டவசத்தால் கிடைத்தது என்று சொல்லும்போது, கிடைத்த காரணம் தெரியாது என்று சொல்வதற்குப் பதிலாக, தெய் வாதீனம், ஈசன் கருணை முதலிய ஏதோ காரணத்தால் கிடைத்தது போல இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ' கிரி ' என்ருல் மலையெனப் பொருள்படும் சமஸ்கிருதத்தில், இதையறியாத தமிழ் மக்களும் சிலர் " கீலகிரி மலை " கைலாசகிரி பர்வதம் என்று உபயோகிப்பது மிகவும் சாதாரணமாகும். சாதாரணமாக தமிழில் கிர ஹணம் பிடிக்கிறது ' என்று சொல்லுவதுண்டு. ஆயினும் அப்படி சொல்பவர்கள் கிரஹணம் எனும் சமஸ்கிருத மொழிக்கு பிடித்தல் என்று பொருள் என்பதை அறிவார்களாயின் கிரஹணம் பிடிக்கிறது. என்று கூறமாட்டார்களல்லவா? பீதாம்பரம் ' என்ருல் மஞ்சள் வஸ்திரம் என்று பொருள்படும் சம்ஸ்கிருதத்தில்; பீதம்ச அம்பரம்பீதாம்பரம், இதையறியாது மஞ்சள் பீதாம்பரம், சிவப்பு பீதாம்பரம், வெள்ளைப் பீதாம்பரம், என்று கூறுவது தவறல்லவா நாளடைவில் பீதாம்பரம் எனும் பதத்திற்கு பட்டு வஸ்திரங்கள் என்றே அர்த்தம் வழங்கலாயிற்று.