பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

 சீமந்தம் ' எனும் சமஸ்கிருத பதத்தை எடுத்துக்கொள்வோம்: இதன் பொருள் முதன் கர்ப்பத்தில் எட்டாவது மாசம் பத்தினிக்கு தலைமயிரை வகிர்த்துசெய்யும் சடங்காம். இது பெண்பாலர்க்குரிய சடங்காம், இதையறியாமல் இன்ன முதலியாருக்கு இன்ன தேதியில் சீமந்தம் நடக்கப்போகிறது என்று பலர் எழுதுகின்றனர். இது தவறாகும் , அன்றியும் சீமந்தம் என்பது ஒரு சமஸ்கிருத பதம் என்பதை மறந்து 'சீமந்தம் ' என்று பலர் எழுதுகின்றனர் 'யோகக்ஷேமம்’ என்னும் சம்ஸ்கிருத தொடர் மொழிக்கு, புதிதாய் பொருள் அல்லது செல்வம் சேர்க்கிறது, இருப்பதை அல்லது பழய செல்வத்தைக் காப்பாற்றுகிறது என்பது பதப் பொருள் ஆகும். இவையறியாது தற்காலம் தமிழர்களிற் பலர் யோகக்ஷேமம் விசாரித்தல் என்றால் தேக சௌக்கியத்தை விசாரிப்பதாக எண்ணுகின்றனர், சாதாரணமாக தமிழர்கள் ஒருவரைப் பார்த்து ஒண்ணட்சியமாக இருக்கவேண்டும் என்று ஆசீர்வதித்தால், ஒரு குறையுமில்லாமல் இருக்க வேண்டுமென்று பொருள் கூறுகின்றார்க ளல்லவா? ஆயினும் அச்சொற்றொடரைப் பிரித்து ஆராய்ந்து பார்த்தால் ஒன்று + அட்சயமாக இருக்க வேண்டுமென்று ஆசீர்வதிப்பதாகும். இவ்வாறு இன்னும் அநேக உதாரணங்கள் எடுத்துக் கூறலாம்; ஆயினும் அது பெருகுமாகையால், இன்னும் ஒரு உதாரணத்துடனே இவ்வாராய்ச்சியை நிறுத்துவோம். தமிழில் 'ஐம்முகம்' என்று சிங்கத்திற்கு ஒரு பெயர் உபயோகிக்கப்பட்டு வருகிறது. சிங்கத்திற்கு ஒரே முகம் என்பது யாவருமே அறிந்ததே. ஆகவே இப்பதம் எப்படி உண்டாயிற்று என்று ஆராய்வோமாயின், சம்ஸ்கிருதத்தில் சிங்கத்திற்கு ஒரு பெயராகிய 'பஞ்சானனம்' என்னும் பதத்திலிருந்து வந்ததென்று அறிவோம். பஞ்சானனம் என்றால் பரந்த முகத்தை, விசாலமான முகத்தை, உடையது என்று பொருள். சிங்கத்தின் முகம் மிகவும் விசாலமாயிருப்பதால் அதற்கு சம்ஸ்கிருதத்தில் அப்பெயர் நியமிக்கப்பட்டது; இந்த அர்த்தத்தை யறியாமல், நமது முன்னேர்கள் பஞ்ச +ஆனனம் அதாவது ஐந்து முகம் என்று பொருள்படுத்தி, ஐம்முகம் எனும் தமிழ் பதத்தை சிருஷ்டித்தனர் என்பது திண்ண மல்லவா?

சில தமிழர்கள் சில சமஸ்கிருத பதங்கள், மிகவும் இலக்கணமாக உபயோகிப்பதாகக் கருதி, தவறாக உச்சரிக்கின்றனர். உதாரணமாக சிரோமணி, என்பதை சிரோன்மணியென்றும். வம்சம் என்பதை