பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 இஸ்லாமி மகம்மதிய மதம் இக்காமத் தொழுகைக்கு நின்று கொண்டிருக்கை இகுவாஸ் மெய்பக்தி இத்திகாத் நம்பிக்கை இபாயதத் கடவுளுக்குசெய்யவேண்டிய வணக்கம் இபுதார் நோன்பிற்குப்பின் செய்யும் பாரணை வர்த்தக மூலமாகவும், மத மூலமாகவுமாவது, வேறு விதங்களில் வந்த சில அராபிப் பதங்களுக்கு உதாரணமாக அடியில் வருவன வற்றைக் கூறலாம். இஜ்ஜத் கெளரவம் இன்சாப் நியாயம் தகரார் ஆட்சேபணை ஆசாமி மனிதன் சால்ஜாப் (சவால்ஜவாப்) கேள்வி பதில், கேள்விக்குப் பதில் ஹிந்தி, உர்து இக்துஸ்தானி பதங்கள் அராபியர்களுக்குப் பிறகு தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள், ஆப் கனிஸ்தான் தேசத்தின் மூலமாக இந்தியாவின் வடக்கே படை யெடுத்து வந்து ஜெயித்த, மொகலாயர் உட்பட்ட மகம்மதியர்களாம். இவர்கள் இந்தியாவின்மீது பன்முறை படையெடுத்து வந்து பிறகு வட இந்தியாவில் தங்கிவிட்டனர் என்பது சரித்திரமூலமாக நாம் நன்கு அறிந்த செய்தியே. வட இந்தியாவில் இவர்கள் காலத்தில் வழங்கி வந்த பாஷைகளில் முக்கியமானவை. ஹிந்தி, ஹிந்துஸ்தானி, உர்து என்பவைகளாம். ஹிந்துஸ்தானி என்பது ஹிந்தி பாஷையினின்றும் உற்பத்தியானதாம். இந்த ஹிந்துஸ்தானி பாஷையுள், பர்ஷியா தேசத்து பாஷையாகிய பர்ஷியன் பாஷை கலக்கப்பட்டதல்ை உண்டான பாஷை உர்து. ஆகவே இந்த உர்து பாஷையானது, சமஸ்கிருதம், பர்ஷியன், அராபிக் மூன்று பாஷைகளின் கலப்பு என்று நாம் ஒருவாறு கூறலாம். உர்து என்பது மகம்மதிய ராஜ பாஷையாக இருந்தது. மேற்கண்ட மகம்மதிய அரசர்கள் டில்லியில் கிலேயாக நின்றபிறகு தெற்கே படையெடுத்து வந்தனர். 1310 ஆம் வருடம் குட்புதீன், தன்சேனைத் தலைவனுகிய மாலிக்காபூர் என்பவனை தென் இந்தியாவிற் படையெடுக்கச் செய்தான். இதுமுதல் மகம்மதி 5