பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్ర சில பாகங்களைக் கைப்பற்றி சிலகாலம் நிலத்திருந்தனர். எனினும் தமிழ் பாஷையில் புகுந்த பிரெஞ்சு பதங்கள் அவ்வளவு அதிகமில்லை. இதற்கு ஒரு காரணம் பிரெஞ்சு மொழிகள் தமிழில் உச்சரிப்பதற்கும் எழுதுவதற்கும் கடினமாயிருப்பதேயாம் என்று ஒருவாறு கூறலாம். இவற்றிற்கு உதாரணமாக பீரோ பீரவு குசினி சமையல் அறை பத்தாய் ரோந்து லாந்தர் (விளக்கு) பொத்தான் (Button) (4) ஆங்கிலேயர் இவர்கள் முதலில் மேற்கூறியபடி வர்த்த கத்திற்காக இங்குவந்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யுத்தமூலமாக நாட்டைக் கைப்பற்றி, 1947 வருடம்வரை இங்கிருந்தவர்கள். இவர் கள் 1639 வருஷம் சென்னபட்டணத்திற்கு வந்து தங்கினர்கள், இவர்கள் பிறகு பிரெஞ்சுக்காரர்களைத் துரத்திவிட்டு, தாமே, தென் இந்தியாவையும் இந்தியா முழுவதையும் கைப்பற்றியவிஷயம் சரித்திரத் தில் கண்டுகொள்க. இவர்கள் இன்றைக்கு 300 வருடங்களுக்கு மேல் நிலையாய்த் தங்கி அரசாண்டு இவர்களுடைய நாகரீகத்துடன் அநேக புதிய ஆங்கில பதங்கள் தமிழ் பாஷைகளில் வழங்கலாயின. அன்றியும் முக்கியமாக தமிழ் நாட்டிலுள்ளவர்களெல்லாம் ராஜாங்க பாஷையாகிய ஆங்கிலத்தைக் கற்று வருவதால், ஆங்கில சாஸ்திர மொழிகள் பலவும் தமிழ் பாஷையில் பரலாயிற்று என்று கூறலாம். வர்த்தக மூலமாக வந்த பதங்கள் ஆண்டிமாண்டு, புராமிசரி நோட், செக் (cheque) பாங்க் (Bank) găsi (Hawker) LILIi (Pauper) $5rsise?algiri. (Insolvent} @III. GossG) (Bottle+9(9) [3á (LoráčLG) நியாயஸ்தலங்களின் மூலமாக வந்த மொழிகள் லாயர், ஜட்ஜ், ஆட்வகேட், பாரிஸ்டர், அப்பில், செஷன்ஸ். ஆங்கில சாஸ்திரங்களின் மூலமாக வந்த மொழிகள். ஆக்ஸிஜன், ஹைட்ரொஜன். கர்பானிக் ஆசிட்காஸ், தர்மாமிடர், என்ஜின் (engine) ரேடியம், அல்யுமினியம்.