பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3色 ஆங்கிலேயர் புதிதாகக் கண்டுபிடித்த விஷயங்களின் மூலமாக வந்த பதங்கள் பைசிகல், டெலிபோன், பெலூன், டிராம்,பையாஸ்கோப், சினிமா ரேடியோ முதலியன. இப்படிப்பட்ட பதங்கள், தற்காலம் தமிழ் பாஷையில் அதிகமாய் நுழைந்துகொண்டு வருகின்றன. உதாரணமாக, ரெயில் என்பதற்கு இருப்புப்பாதை என்று கொஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது எனினும் சாதாரண ஜ்னங்களில் மிகவும் பெரும்பாலார் ரெயில் என்கிற பதத்தையே பேச்சிலும் எழுத்திலும் உபயோகிக்கின்றனர் என்பது யாவருமறிந்த விஷயமே. இன்னெரு உதாரணமாக பைசிகல் சைகல், என்கிற பதத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு துவிசக்கர வண்டியென்று மொழிபெயர்க்கலாம்; ஆயினும் எத்தனை தமிழர்கள் சைகில் என்று கூருது துவிசக்கரவண்டி என்று கூறுவார்கள்? அன்றி யும் துவிசக்கர வண்டி என்பதும். சரியான தமிழ் மொழிபெயர்ப்பா யினும் இரண்டு சக்கர வண்டிகளாகிய, கட்டை வண்டிகளையும் குறிக்குமல்லவா? அன்றியும் சாதாரணமாக எல்லா பாஷைகளிலும் பெரிய பதங்களையெல்லாம் குறுக்கி, சிறு பதங்களாக வழங்குவது வழக்கம் அல்லவா. ஆங்கிலேயர் மூலமாக தமிழ் காட்டிற்கு வந்த விளையாட்டுகளின் மொழிகள் கிரிகெட், டெனிஸ், ஹாக்கி, பில்லியர்ட்ஸ், பிங்பாங், கால்ப் (golf) முதலிய பதங்களெல்லாம் ஆங்கிலேயர் ஆடும் ஆட்டங்களுக் குரியவை முன்காலத்தில் இவ்வாட்டங்களெல்லாம் தமிழ்நாட்டி லில்லை, ஆகவே அவ்விளையாட்டுகளின் பெயர்களும் அவைகளுக் களுக்குரிய பாட், ஓவர் (Over), பெயில் (Bail), இன்னிங்க்ஸ். (Innings) செட் (set), முதலிய பதங்களும் அப்படியே தமிழில் மாறுதலின்றி நுழைந்தன. சீட்டாட்டத்தை (Cards) எடுத்துக் கொள்வோம். சீட்டு என்பது காரணப் பெயராகும். இதில் வழங்கும் நான்கு ஜாதிகளாகிய ஸ்பேட், ஆடுதன், டைமண்ட், கிளாவர் துருப்பு (Trumph) என்னும் ஆங்கிலப் பதங்களையே, தமிழர்கள் சீட்டாடும்போது உபயோகிக்கின்றனர்; இதன் மூலமாகவே இவ்வாட்டம் சாதாரணமாக முன்காலத்தில் தமிழ்நாட்டில் இல்லாமல்,