尋酶
போவதுபோல், சில பழய மொழிகள், உபயோகமற்று, மறைந்து போகின்றன. இம்முறைப்படி நமது தமிழினின்றும், மாண்டுபோன சில மொழிகளை ஆராய்வோம். உதாரணமாக, அச்சோவே, ஆய மணிகட்டி, ஏளங்கோட்மரை, திணபசித்தெற்ருலம், போழ முள்தளை முதலிய மொழிகளைக் கூறலாம்.
(1) அற்றுப்போன கலை மொழிகள்
முற்காலத்தில் தமிழர்கள் பயின்றுவந்த சில கலைகள், பிறகு வழக்கிலில்லாமல், இறந்துபட்டமையால், அக்கலைகளில் உபயோகிக் கப்பட்ட பல பதங்கள் அற்றுப் போயின. ஆகவே சற்றேறக்குறைய 1500 வருடங்களுக்குள் தமிழர்கள் கட்டிய கோட்டைகளின் உறுப் புக்களின் பெயர்களுக்கெல்லாம் பெரும்பாலும், பிறகு வழக்கத்திலில் லாமல் மடிந்து போயினவென்றே நாம் கருதல் வேண்டும்; அப்பதங் களுக்கு காம் ஒருவாறு அர்த்தம் அறிந்தபோதிலும், அம்மொழிகள், நூல்களிலும், பேச்சு வழக்கிலும் தற்காலம் உபயோகிக்கப்படுவ தில்லை என்று நிச்சயமாய்க் கூறலாம். இப்படிப்பட்ட பூர்வீக தமிழ் மொழிகளுக்கு சில உதாரணங்களை இங்கு கருதுவோம்.
அகப்பா கோட்டைமதில்
ஐயவித்துலாம் மதிலுள்ள பொறிவகையிலொன்று, தலை
களைப் பிடித்துத் திருகும்படியானது.
எப்புழை அகத்துள்ளோர் புறத்துள்ளோர் மீது எய் வதற்கு மதிள்மீது அமைக்கப்பட்ட துவாரம்
சுருங்கை கோட்டைக்குக் கள்ள வழி
அரிகயிறு தொட்டவரை அறுக்கும் நூள்பொறி.
அற்றுப்போன பழய விளையாட்டு மொழிகள்
பண்டைக்காலத்துத் தமிழ்ச் சிறுவர்கள் ஆடிய ஆட்டங்கள் நானாவாத்தியில் மறைந்தபொழுது அவ்வாட்டங்களின் பெயர்களும் வழக்கற்றுப் போய், மறையத் தலைப்பட்டன. இதற்கு உதாரணமாக, திருவாசகத்தில் கூறப்பட்ட உந்திபறத்தல், தோளுேக்கம், தெள் ளேனம், முதலியவற்றைக் கூறலாம். முற்காலத்திய பெண்கள் எப் படி ஆடினர்கள் என்பதையும் மறந்தோம் அம்மாணையெனும் ஆட்டம் சற்றேறக்குறைய 60 வருடங்களுக்குமுன், ஏக தேசமாக சில பெண் களால் ஆடப்பட்டு வந்தது; அதுவும் வரவர மறைந்துகொண்டு வருகிறது.
பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/43
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
