பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓3 வத்தில் கட்டபாடை, கொல்லி, இரத்னம், பஞ்சுரம், தக்கேசி, கொல்லிக்கெளவாணம், அகத்தை, அரும்பான் முதலிய அநேக பண் வகைகள் வழக்கத்திலிருந்தன . இவைகளே முக்கியமாக தேவா ரப் பதிகங்களைப் பாடுவதில் தற்காலத்தவர் உபயோகிக்கின்றனர். தமிழ் நாட்டில் பூர்வ காலத்தில் பலவகைப்பட்ட இசைக்கருவி களும் இருந்தன என்பதற்கு ஐயமில்லை; அவற்றுள் யாழ் என்பது மிகவும் சிறந்ததாக விளங்கியது! அதை வாசிப்பவர்களுக்கு யாழ்ப் பாணர் என்று பெயராம். (யாழ்ப்பாணம் என்ற நாடானது இதனின் றும் பிறந்தது என்பது கவனிக்கத்தக்கது.) வீணை யென்பது பிறகு வந்த சமஸ்கிருத மொழியாம். சிலர் யாழ் என்பதற்கே வீணை என்று அர்த்தம் கூறுகின்றனர் : இவையிரண்டும் வெவ்வேருண இசைக் கருவிகள் என்பதற்கு திருவாசகத்தில் திருப்பள்ளி எழுச்சியில் 'இந் கிசை விணையர், யாழினர் ஒருபால்', என்று கூறப்பட்டதே போது மான அத்தாட்சியாகும். குழல் அல்லது வேய்ங்குழல் என்பது மற்ருெரு பழைய தமிழ் மொழியாம்; தற்காலத்தில் இதை புள்ளாங்குழல் என்று கூறுகின் றனர்; ஆயினும் சரியான மொழி புல்லாங்குழல் என்பதாம். இசைக்கருவிகள், நரம்புக்கருவி, துளைக்கருவி, தோற்கருவி என மூவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன முற்காலம். முன்னர் நரம்புக் கருவியையும் துணைக்கருவியையும் கருதினுேம்; இனி தோற் கருவியைக் கருதுவோம். இது தோலாற் செய்யப்பட்ட பறை முதலி யவற்றைக் குறிக்கும். அவைகளுக்கு நமது முன்னேர்கள் தாழ்ந்த குரலினையுடைய தண்ணுமைக் கருவிகள் என்று பெயரிட்டிருந்த னர். இவற்றுள், பேரிகை, இடக்கை, உடுக்கை, சல்லிகை, கரடிகை, திமில முதலிய பலவகை கூறப்பட்டிருக்கின்றன. இவை களனைத்தும் தமிழ் மொழிகளே. இவைகளுள் பல வழக்கற்றுப் போயின. வழக்கற்றுப்போன காடகத் தமிழ் சொற்கள் நாடகத் தமிழில் பூர்வத்தில் அநேக தமிழ்மொழிகள் வழங்கப் பட்டு வந்தன. அவைகள் பிற்காலத்தில் மறைந்துபோயின. நாடகம் என்பது சமஸ்கிருத மொழியாயின், அதற்கு பதிலாக சுத்த தமிழ் மொழி கூத்து என்பதாம். கூத்து என்பதை பூர்வீக தமிழர்கள்