பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2

 அங்கு தங்கினர் என்றும் செழிப்புள்ள நிலங்களுக்குப் போனவர்கள் நிலத்தையுழுது விதை விதைக்கக் கற்றுக்கொண்டு அவ்விடத்தில் தங்கத் தலைப்பட்டனரென்றும், பிறகு இம்மாதிரியாக அவர்கள் தங்கின இடங்களெல்லாம் சிற்றுர்களாகி, மனிதர்கள் முதலில் மண்ணினலால் அமைத்து கட்டிடங்களைக் கட்டி, தீயுண்டாக்கும் முறைகளைக் கற்று சுட்ட மண் அல்லது செங்கல்லினால் கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்து, கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவித நாகரீகங்களையும் அடைந்தனர் என்று மேற்குறித்த சாஸ்திரிகள் அபிப்பிராயப்படு கின்றனர்.


இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நாகரீகமடைந்த மனித வர்க்கமானது, ஆதிகாலம் தொடங்கி, மற்றப் பிராணிகள் ஒன்றுக்கொன்று எங்ஙனம் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க, வாயினால் சப்தங்களை உண்டாக்குகின்றனவோ அங்ஙனமே, வாயினால் ஒலியை எழுப்பி, ஒருவருக்கொருவர், தாம் விரும்புவதையோ, வேண்டுவதையோ, தெரிவித்திருக்க வேண்டுமென்பதற்கு ஐயமில்லை. இவ்வொலிகள், நாளடைவில், ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரப்பட்டு இன்ன ஒலி செய்தால் இன்ன பொருள் என்று வழக்கின்மூலமாக நிர்ணயிக்கப்பட்டதே, மனித பாஷையின் உற்பத்தியாகும். இதைப்பற்றி இன்னும் விவரித்துக்கூற இது இடமல்ல.


மனித வர்க்கத்தின் உற்பத்தியைப் பற்றியும், மனித பாஷையின் ஆரம்பத்தைப் பற்றியும், மேல் கூறியதைக் கொண்டு, தமிழ் பாஷை யானது ஆதி பாஷைகளிலொன்று என்பதைப்பற்றி இனி ஆராய்வோம். பூகோள உறுப்பிலக்கணத்தை ஆராயும் சாஸ்திரறிஞர் (Geologists) இந்தியாவின் தென்பாகமானது, அதாவது தக்காணம் (Dekkan) என்று சொல்லப்பட்ட விந்தியமலைக்குக் கீழுள்ள பிரதேசமானது, ஆதிகாலம் தொடங்கி பூபாகமாக, அதாவது தரையாகவே, இருந்ததாக அபிப்பிராயப்படுகின்றனர். இதைக் கொஞ்சம் விவரித்துக் கூறவேண்டி யிருக்கிறது : தற்காலம் ஆசியா கண்டத்தில் மங்கோலியா தேசத்தில் பாலைவனமாயிருப்பதும், ஆப்பிரிக்கா கண்டத்தில் சஹாரா எனும் பாலைவனமும், ஆதிகாலத்தில் நீர் நிரம்பிய, சமுத்திர பாகமாயிருந்ததென்று அங்கு தற்காலமும் கிடைக்கும் நீர்வாழ் ஜந்துக்களின் ஹஸ்தி (Bones)களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தென் இந்தியாவில் அப்படியில்லை. இங்கு மண்ணின்கீழ் இருக்