பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$స్త్రీ திருக்கோயிலூர் திருக்கோவலூர் ராசிமங்கலம் ராகசிம்மமங்கலம் பழனி ஆவினங்குடி புரீபெரும்பூதுர் பூதலூர் தஞ்சாவூர் ராஜராஜேஸ்வரம் அழகர்மலை திருமாலிருஞ்சோலே, பழுமுதிர்சோலை. சில ஊர்களின் பெயர்கள், வடமொழியாம் இங்குவந்த பிறகு, சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். உதாரணமாக. தமிழ்ப் பெயர் சமஸ்கிருதப் பெயர் வெண்காடு ஸ்வேதாரண்யம் மறைக்காடு வேதாரண்யம் திண்டுக்கல் பத்மபுரி திருப்புல்லணை (திருப்புல்லாணி) தர்ப்யசயனம் திருஇடைமருதூர் மத்யார்ஜுனம் முதுகுன்றம் விருத்தாசலம் முதலியவற்றைக் கூறலாம். கோயில்களினின்றும் பெயர்பெற்ற ஊர்கள் பிட்சாண்டார் கோயில், சிங்கப் பெருமாள் கோயில், பசுபதி கோயில், மாரியம்மன் கோயில், சங்கரநாயனர் கோயில், சுந்தரப் பெரு மாள் கோயில், வைதீஸ்வரன் கோயில் இவைபோன்ற ஊர்களின் பெயர்களெல்லாம், முற்காலத்தில் தமிழ்நாட்டு அரசர்கள், கோயில் களைக் கட்டி, அவற்றைச் சுற்றி குடிகளை வாழச் செய்த பிறகு, அவ் வூர்களுக்கெல்லாம் கோயில்களின் பெயரே வழங்கப்பட்டது என்று ஊகிக்கலாம், கோட்டைகளைக் குறிக்கும் மொழிகள் கோட்டை என்று சில ஊர்களின் பெயர்கள் முடிகின்றன. இவை ஆதியில் கோட்டைகளாக இருந்து பிறகு அவற்றை சுற்றிலும் ஜனங் கள் வசிக்க ஆரம்பிக்க, அப்பெயர்களையுடைய ஊர்களாயின என