பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

 எய். அடி, கடி, பிடி, மேய், கறவெட்டு. அகழ், குடி நட, வா, மடி, போ, உண், அறு, முதலியவைகளைக் கூறலாம். இவைகள் தமிழ் மொழிகள் என்பதைக் கவனிக்க.


ஆதிகாலத்தில் மனிதர்கள் பேச ஆரம்பித்தபொழுது, ஓர் ஒலி அல்லது இரண்டு ஒலிச் சொற்களைத்தான் பெரும்பாலும் உபயோகித்திருக்க வேண்டுமென்று கூறினோம். இதை இன்னொருவிதத்தில் ஆராய்ந்து பார்ப்போம். குழந்தைகள் பேசத் தொடங்கும்பொழுது அவர்கள் எளிதில் உச்சரிக்கக்கூடிய எழுத்துகள், ம, ப, என்பவை யாம். வாயை மூடித் திறந்தால் மா என்கிற ஒலி உண்டாகிறது : கொஞ்சம் கெட்டியாய் அழுத்தித் திறந்தால் பா, என்றும் சப்தம் உண்டாகிறது . இவ்வெழுத்துகளடங்கிய சொற்களே, பெரும்பாலும் எல்லா பாஷைகளிலும் குழந்தைகள், முதலில் குறிக்கவேண்டிய, அவர்கள் பெற்றோரைக் குறிக்கும் சொற்களாக உபயோகப்படுகிறதைக் காண்க. பெரும்பாலும் எல்லா திராவிட பாஷைகளிலும் 'அம்மா, அப்பா’ எனும் சொற்கள் தாய் தந்தையரைக் விளிக்கும் சொற்களாம். (ஆங்கிலத்திலும் பப்பா, மம்மா, என்னும் சொற்களை ஒத்திட்டுப் பார்க்க). ஆயினும் திராவிட பாஷைகளில் ஒன்றாகிய துளுவ பாஷையில் அப்பா, என்றால் தாய் என்று அர்த்தமாம். அம்மா என்றால் தகப்பன் என்று அர்த்தமாம் ; குழந்தைகள் பிறகு கற்க வேண்டிய நெருங்கிய பந்துக்களைக் குறிக்கும் சொற்களும் இங்ஙனம் சிறு சொற்களாக இருப்பதை கவனிக்க. அண்ணா, ஆய்யா, தாதா, மாமா, மாமி போன்றனவாம்.


இனி திராவிட பாஷையாகிய தமிழ் பாஷை மிகவும் புராதனமானது என்பதற்கு நமக்குள்ள ஆதாரங்களை ஆராய்வோம்.


தமிழில் தற்காலம் நமக்குக் கிடைத்திருக்கும் புஸ்தகங்களில் தொல்காப்பியம் என்பது மிகவும் பழமையான ஒரு நூலாம். தொல் காப்பியம் தொல்-காப்பியம். இச்சொற்றொடரில் தொல் என்பதற்கு பழமை என்று பொருளாம். முதல் இடைச்சங்கங்கள் என்று இரண்டு சங்கங்கள் இருந்தனவோ, இல்லையோ, தொல்காப்பியமானது கடைச் சங்க காலத்திற்கு முந்திய நூல் என்பதற்கு ஐயமில்லை. கடைச்சங்கம் என்பதின் காலம் திருவள்ளுவர் காலமாம். ஆகவே தொல்காப்பியமானது சற்றேறக்குறைய தற்காலத்தில் வழங்கும் கிறிஸ்துவ ஆண்டிற்கு முற்பட்ட நூல் என்று நாம் ஊகிக்கலாம். அக்காலத்தில்