பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

 வரையப்பட்ட இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆராயுமிடத்து இதற்குமுன் அநேகம் தமிழ் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டு மென்று நாம் ஒருவாறு நிச்சயிக்கலாம், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறல் ' என்னும் நியாயம் எல்லோராலும் ஒப்புக்கொள் ளப்பட்டதேயாம். அன்றியும் ஒரு பாஷையில் புஸ்தகங்கள் இயற்றப்படும் ஸ்திதி வருமுன், அநேகம் ஆயிரம் ஆண்டுகளாக அப்பாஷை பேசப்பட்ட பாஷையாயிருந்திருக்க வேண்டுமென்பது, எல்லா பாஷா தத்துவ சாஸ்திரிகளாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆகவே தொல்காப்பியம் இயற்றப்படுவதற்குமுன், அநேக ஆயிரம் வருடங்களாக தமிழ் பாஷையானது தமிழகத்தில் பேசப்பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயமாய்க் கூறலாம்.


இனி சரித்திரமூலமாக, தமிழ் புராதன பாஷையென்பதற்கு ஏதாவது அத்தாட்சிகள் இருக்கின்றனவா என்று இனி யோசிப்போம், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஆண்டுவந்தனர் என்று பூர்வீக சரித்திர ஆராய்ச்சிசெய்த அறிஞர் எல்லோரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். தமிழில் இவர்களுக்கு மூவேந்தர் என்று பெயராம். சேர, சோழ, பாண்டியர்களுடைய பூர்வீக பாஷை தமிழ் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. சேரர்களுடைய முக்கியமான பட்டணம் வஞ்சி என்பதாம். சோழ அரசர்களுடைய புராதனமான முக்கிய பட்டணம் உரையூர் ; பாண்டியர்களுடைய முக்கிய பட்டணம் ஆதியில் மதுரை என்று ஒன்றிருந்ததாகவும், அது கடல்கொள்ளப்பட்டபின், கவாடபுரம் என்பது ராஜ தானியானதாகவும், அதுவும் அழிந்தபிறகு, தற்காலத்திய மதுரைப் பட்டணம் ராஜதானியானதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பாண்டியர்களுக்கு ஆதிகாலத்தில் தாமிரபரணியின் கரையிலிருந்தகொற்கைஎன்னும் ராஜதானி ஒன்றுண்டு. அக்கொற்கையிலிருந்து தற்கால மதுராபுரிக்கு தங்கள் ராஜதானியை கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமயே. மாற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்று டாக்டர் கால்ட் வெல் அபிப்பிராயப்படுகிறார், சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தொன்றுதொட்டு தமிழ் பாஷை வழங்கி வருகிறது. வாஸ்தவம்தான். ஆயினும் சேர நாடாகிய தற்காலத்திய மலையாள தேசத்தில் மலையாள பாஷையன்றே வழங்கப்படுகிறது என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நாம் இரண்டுவிதத்தில் பதில் உரைக்கலாம். முதலாவது மலையாள பாஷை தமிழின் கிளை பாஷை யென்பதாம். இரண்டாவது பழைய காலத்தில்