பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

(12) காஞ்சீபுரம் இது தமிழ்நாட்டிலிருக்கும் மிகவும் பழைய ஊர்களிலொன்றாம். கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் இங்கு அரசாண்ட பழைய அரசர்களது காலத்திற்கு முன்பே இது இருந்ததென்பதற்கு சந்தேகமில்லை. ஆரியர்கள் வந்த பிறகு அவர்கள் கொண்டாடும் சப்தபுரி'களில் இது ஒன்ரும். அன்றியும் "நகரேஷ-காஞ்சி" எனும் சமஸ்கிருத மொழிக் தொடர் இதன் பூர்வீக பெருமையை விளக்குகிறது. காஞ்சி என்பது சுத்த தமிழ் மொழியாம்-ஓர் வகைப் பூவர சின் பெயராம். காஞ்சிப் பூ மாலையைப் புனைதல் ஓர் பழைய வழக்கம் புறத்துரை இலக்கணத்தில் நன்கு விளங்கும் முல்லையினின்றும் திருமுல்லைவாயல் வந்ததுபோல, காஞ்சியினின்றும் காஞ்சீபுரம் வந்திருக்கவேண்டும். பூர்வ காலத்தில் இது ஒரு அரனுடைய பூட்டணமாயிருந்ததென்பதற்குச் சந்தேகமில்லே ; புரம் என்பது சாதாரணமாக மதில் காப்புடைய பட்டணங்களுக்கே கொடுக்கப்பட்டன என்பதை முன்பே குறித்துள்ளோம். மணி மேகலையில் "பொன் எயிற் காஞ்சி" என்று கூறியிருப்பதைக் காண்க. (எயில்=மதிற் சுவர்) இதற்கு 2 மைல் துரத்திலுள்ள தற்காலம் சின்ன காஞ்சிபுரம் எனும் ஊர் ஆதியில் அத்தியூர் என்று பெயருடைத்தாயிருந்தது. ஆதியில் சிவ ஸ்தலமாயிருந்தது வைஷ்னவ ஸ்தலமாக மாற்றப்பட்டபின் சின்ன காஞ்சிபுரம் எனும் பெயர் வந்தது.


(13) செவாப்பேட்டை ஆங்கிலத்தில் செவாபெட் (Sevapet) என்று மாறியிருக்கிறது. இதன் சரியான பெயர் செவ்வாய்ப்பேட்டையாம். இதை சற்று ஆராய்ந்து பார்ப்போமாயின் இப்பெயர் வந்ததற் குக் காரணம் அறிவோம். முற்காலத்தில் சில இடங்களில் வர்த்தகர்கள் வாரத்திற்கொருமுறை ஓரிடத்தில் சந்தை கூடுவது வழக்கம்; இப்பொழுதும் மதுரை முதலிய ஜில்லாக்களில் இவ்வழக்கம் உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் இந்த இடத்தில் ஆதிகாலத்தில் சந்தை கூடு வது வழக்கமாயிருந்தபடியால் செவ்வாய்ப்பேட்டை எனப் பெயர் வந்ததாம், புதவார்பெட், சுக்கிரவார்பெட், சனியார்பெட் என்னும் பெயர்களையுடைய கிராமங்கள் இதர ஜில்லாக்களில் இருப்பதைக் காண்க.


(14) அச்சிறுபாக்கம் அச்சு+இறு-பாக்கம். ஓர் சோழ அரசன் இங்கு ரதத்தின் மீது ஊர்ந்து செல்லுங்கால், ரதத்தின்