பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


அச்சானது இங்கு முறிய அரசன் அதை சரிப்படுத்திக்கொண்டு போக் இங்கு தங்கவேண்டி வந்தபொழுது, இங்கு ஓர் லிங்கம் பிரதிஷ்டை செய்து, பிறகு கோயில் கட்ட, இவ்வூருக்கு அச்சிறுபாக்கம் எனப் பெயர் வந்ததாம். தேவாரத்தில் குறிக்கப்பட்ட சிவ ஸ்தலங்களில் இது ஒன்ருகும். திரிபுர சம்ஹார காலத்தில் சிவபெருமானுடைய தேரின் அச்சு முறிந்ததாக ஸ்தல புராணம் கூறும்.


(15) கோழியூர் இது உரந்தைக்கு பழைய பெயர் கோழி+ஊர். இங்கு சோழர்கள் சில காலம் அரசாண்டமையால் கோழிவேந்தன் என்று அவர்களுக்கும் பெயராயிற்று. உரந்தை (உறையூர்)யைப் பற்றி முன்பே கூறியுள்ளோம்.


(16) பந்தர் என்பது மசுலிபட்டணம். (மச்சிலிப்பட்டணம்) பந்தர் என்ருல் முத்துக்குப் பெயர்பெற்ற கடற்கரை பட்டினம் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவில் பந்தர் என்கிற பதத்திற்கு கடல் வியாபாரிகள் தங்கள் சரக்குகளை விற்குமிடம் என்று பொருள்படும். (பம்பாயில் அபாலோ பந்தர் முதலிய பல பந்தர்கள் இருப்பதைக் காண்க) சென்னையிலும் பந்தர் வீதி என்று ஒரு வீதியுண்டு. மசுலிபட்டினம் பூர்வத்தில் கடல் வியாபாரத்தில் சிறந்த ஊராயிருந்தமையால் இதற்கு பந்தர் எனும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று.


(17) தொண்டி இது ஒர் ஊரின் பெயராம். பூர்வ காலத்தில் மேநாட்டார் தென் இந்தியாவில் இப்பெயர்கொண்ட ஓர் துறைமுகம் இருந்ததாகக் குறித்திருக்கின்றனர். தொண்டி என்கிற ஊர் கேரள தேசத்தில் ஒன்று உண்டு ராமநாதபுரம் தாலூகாவில் ஒன்றுண்டு: இப்பெயர்கொண்ட ஊர் சேர நாட்டிலும் ஒன்றுண்டு. வாஸ்தவம் என்னவென்றல், தொண்டி எனும் பதத்திற்கு கடற்கழி என்று அர்த்தம். கடலானது கிலத்தில் பாய்ந்து கழியாகச் செய்யப்பட்ட நிலத்திற்கு தொண்டி என்று பூர்வத்தின் பெயர் ஆகவே இப்பெயரைக் கொண்ட பல இடங்களிருப்பது ஆச்சரியமன்று.


(18) கூடலூர் என்பது ஓர் பழைய தமிழ் ஊரின் பெயர். இதைத் தற்காலம் கடலூர் என்று பலர் கூறுகின்றனர். இது ஒருவிதத்தில் தவருகும். கூடலூர் கிழார் என்பதைக் காண்க. கூடல் = கடல் சங்கமம் என்பதாம்.