பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


(19) செங்கல்பட்டு என்பதற்குச் சாதாரணமாக செங்க்ல்பட்டு, செங்கல் சூளை போடும் சிற்றுர் என்று அர்த்தம் கூறிவிடலாம். ஆயினும் அப்படி கூறுவது தவருகும் இவ்வூரின் பழைய பெயர் செங்கழுநீர்ப்பட்டு என்று கல்வெட்டுகளில் இருக்கிறது. செங்கழுநீர்ப்பட்டு உச்சரிப்பது சற்று சிரமமாயிருப்பதால் அதைக் குறுக்கி செங்கல்பட்டு என்று வழங்கலாயிற்று. இங்ங்னமே திருச்சிலம் பேரூர் என்பது திருச்சூர் எனவும், பழைய பெயர்கொண்ட சோழபுரம் என்பது பழைய செங்கடம் எனவும், மயூரபுரம் என்பது மாயவரம் என்றும் குறிக்கப் பட்டிருப்பதைக் கவனிக்க,


(20) கார்வேடி நகரம் என்பது காடுவெட்டி நகரமாம், காட்டையழித்து நகரமாக்கப்பட்டது என்று பொருள்படும். காடு வெட்டிச் சோழன் என்பதைக் காண்க.


(21) சோளிங்கபுரம் என்பது சோழலிங்கபுரம் என்பதின் சிதைவாகும்.


(22) கலிங்கம் இது ஒரு தேசத்தின் பெயர். அங்கிருந்து முதலில்வந்த ஒர்வகை ஆடைக்கு கலிங்கம் என்று பெயர் வழங்கலாயிற்று.


(23) துயிலி இது ஒரு கிராமத்தின் பெயர். அக்கிராமத்தி லிருந்து முதன் முதலாக நெய்யப்பட்டுவந்த ஆடைக்கு துயிலி என்று பெயர் வந்தது.


(24) அஷ்டக்கிராம என்பது மைசூரிலுள்ள ஓர் இடம். அவ் விடமிருந்து வரும் ஓர்வித வெள்ளைச் சர்க்கரைக்கு அப்பெயரே வந்துவிட்டது.


ஆறுகளின் பெயர்கள்


இனி தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளின் பெயர்களைப் பற்றி சற்று ஆராய்வோம். ஆறு அல்லது யாறு என்பது சுத்தத் தமிழ் மொழியாம். யாறு என்பது பழந் தமிழ் மொழி, நதம் நதி என்பவை சமஸ்கிருத மொழிகள்.


(1) குமரி என்பது பழங் காலத்தில் ஒரு ஆற்றின் பெயரா யிருந்தது. தென் குமரி என்றது குமரியாற்றைக் குறித்தேயாம்: இது தமிழ்நாட்டிற்குத் தெற்கு எல்லையாயிருந்தது; இதைக் கடல்