பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டதென அறிகிறோம், தற்காலம் குமரி என்பது தென் இந்தியா, வின் தெற்கு முனை (Cape)யின் பெயராயிருக்கிறது; கன்னியாகுமரி என் பதைக் காண்க.

(2) தாமிரபரணி இதன் பழைய தமிழ்ப் பெயர் செம்பில் என்பதாம். இதை சமஸ்கிருதக்காரர்கள் தாமிரபரணி என்று மொழிப்பெயர்த்தனர். தாமிரம் =செப்பு இதற்குப் பொருணை என்றும் பெயர் உண்டு. இச்சந்தர்ப்பத்தில் இலங்கைத் தீவிற்கு மிகவும் புராதனமான பெயர் தாமிரபரணி என்பது கவனிக்கத்தக்கது. கிரேக்கர்கள் இந்தத் தீவை தாம்ரபோன்' என்று அழைத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் தாம்ரபர்ணிக்களேயினின்றும் இத்தீவிற்கு முதல் முதல் குடிபுகுந்தவர்கள், தாங்கள் வந்த இடத்தின் பெயரையே இதற்கும் கொடுத்திருக்க வேண்டுமென்று எண்ணப்படுகிறது. (அமெரிக்காவில் நியூயார்க் (New york) என்னும் பட்டணத்திற்குப் பெயர் வந்ததைக் காண்க.)

(3) காவேரி பழைய நூல்களில் இதைக் காவிரி என்று அழைத்துள்ளார். இது சுத்த தமிழ் மொழியென்று சில தமிழ் அறிஞர் கூறுகின்றனர். மணிமேகலையில் காவிரி வாயிலில் என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க; காவிரிப்பூம்பட்டணம் என்பதையும் கவ விக்க; சிலப்பதிகாரத்தில் வேளாளரை காவிரிப் புதல்வர் என்று கூறப் பட்டிருக்கிறது. காவி வர்ணமுடைய ஜலத்தையுடையதால் இப்பெயர் இதற்கு வந்திருக்கலாம் என்று கால்ட்வெல் துரை நினைக்கிறார், காவேரி, என்றதற்கு, காகமானது குடத்தைச் சாய்க்க, அதனுலுண்டான நதி, என்பது புராணக் கதையாகும். கவேரன் என்பவனுடைய புதல்வி ஆதல்பற்றி காவேரி என்பது வடமொழியாளர் கொள்கையாம். இந்நதிக்கு பொன்னி என்று ஒரு பழைய பெயர் உள்ளது. பொன்னைப்போல் அத்துணை அருமையானது, அல்லது பொன்னைத் தருவது (தன் வளப்பத்தினுள்) என்று பொருள்படும், (பொன்விளைந்த களத்தூர் என்பதை ஒத்திட்டுப் பார்க்க.)

(4) பாலாறு இது சுத்தத்தமிழ் மொழியாம் இதை வடமொழிக்காரர்கள் இர நதி என்று மொழி பெயர்த்திருக்கின்றனர்; பால்போன்ற ஜலத்தையுடையது அல்லது பால்போன்ற வெண் மலையையுடையது என்று பொருள்படும்.